சகாயம் செய்த சகாயம்!! கோ-ஆப் டெக்ஸின் விற்பனை 250கோடியை எட்டியது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேலம்: பட்டு புடவை வாங்க சென்னை சில்க்ஸ், போத்திஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் நாம், அரசு நெசவாளர்கள் தரமான முறையில் நெய்ந்து விற்கும் கோ-ஆப் டெக்ஸ் கடைக்கு செல்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்நிலையில் முற்றிலும் சரிவை எட்டிய கோ-ஆப் டெக்ஸின் மேலாண் இயக்குனராக பதியேற்றார் தமிழகத்தின் அதிரடி ஐஏஎஸ் அதிகரியான சகாயம்.

 

இவரின் தலைமையில் கோ-ஆப் டெக்ஸ் பல பரிமானங்களில் பட்டு புடவையை போலவே பொழிவு பெற்றது. மேலும் ''நடப்பு நிதியாண்டில் கோ-ஆப் டெக்ஸின் விற்பனை இலக்கான ரூ300 கோடியில் ரூ.250 கோடியை எட்டிவிட்டோம், இன்னும் சில மாதங்களில் 300 கோடி ரூபாய் இலக்கையும் அடைவோம்'' என திரு.சகாயம் கூறினார்.

வேஷ்டி தினத்தின் எதிரொலி

வேஷ்டி தினத்தின் எதிரொலி

சேலத்தில் மாணவர்களுக்கான 'இலக்கு - லட்சியம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய திரு சகாயம் வேஷ்டி தினம்' கொண்டாடப்பட்ட பின், கோ - ஆப்டெக்ஸில், கூடுதலாக, ஒரு லட்சம் வேஷ்டிகள் விற்பனையாகியுள்ளன. மேலும் இத்தின கொண்டாடத்தின் மூலம் மக்களிடையே வேஷ்டி அணியும் ஆர்வம் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

2014ஆம் நிதியாண்டில் ரூ.300 கோடி என்ற இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறோம் இதுவரை, 250 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளத என அவர் தெரிவித்தார். கடந்த, 14 ஆண்டுகளாக, நஷ்டத்தில் தத்தளித்த கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் 2 கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில் 15 கோடி ரூபாயும் லாபம் அடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

30 கோடி லாபம்
 

30 கோடி லாபம்

2015ஆம் நிதியாண்டில் ரூ.30 கோடி லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை அடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய தொழில் நுடபம் பயன்படுத்தி சிறப்பான வேலைப்பாடுகளுடன் சேலைகளை தயாரிக்க டிசைன் மையம் அமைக்கப்பட்டு, இதில் 'சூப்பர் 1,000' என, 1,000 புதிய டிசைன்களை உருவாக்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 'சரித்ரா' பட்டு புடவை

'சரித்ரா' பட்டு புடவை

மேலும் தமிழகத்தின் பெருமையை படைசாற்றும் வகையில், சரித்திர புகழ் பெற்ற சிற்பங்களையும், இடங்களையும் காட்சிப்படுத்தும், 'சரித்ரா' பட்டு புடவையும் ஒன்றையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் முகூர்த்த பட்டு சேலை விற்பனையில், 85 கோடி ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம்.

தாவணி தினம்

தாவணி தினம்

2015ஆம் நிதியாண்டில் மட்டும், சுமார் 200 கோடி ரூபாய்க்கு விற்பனையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். மேலும் வேஷ்டி தினம் போன்றே, தாவணி தினம் கொண்டாடவும், கல்லூரிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம் என கூறினார். (நம்ம ஊர் பெண்களை தவணியில் பார்த்து ரொம்ப நாளகிவிட்டது)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

co-optex sales hit 250 crore mark-sagayam

co-optex sales hit 250 crore mark-sagayam
Story first published: Saturday, February 22, 2014, 14:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X