மும்பை: தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா, எட்டிஹெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 5 போயிங் 777-200 ரக விமானங்கள் விற்பனை செய்வதன் மூலம் சுமார் $340 மில்லியன் டாலரை (ரூ 2,100 கோடி) உயர்த்த திட்டமிட்டுள்ளது என ஒரு ஏர்லைன் விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானங்களை விற்பனை செய்வதினால் பெறப்படும் வருமானம் பொதுவாக "டிரிபிள் செவென் " என்று குறிப்பிடப்படுகிறது.

போயிங் 777-200 ரக விமானங்கள் ஐந்தினை விற்பதன் மூலம் பெறப்படும் நிதி, விமானங்களுக்கு எதிரான கடன்களை குறைக்கவும், அதை தொடர்ந்து வட்டி தொகைக்காகவும், அசலை திருப்பி செலுத்தவும். மேலும் விமானங்களின் பராமரிப்பு செலவிற்காகவும் ஆண்டு ஒன்றுக்கு $100 மில்லியன் டாலர் சேமிப்பை நாங்கள் எதிர் நோக்கியிருக்கிறோம் என்றும் அவர் கூறினார். இது விமான நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை பலப்படுத்தும் என்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருந்தார்.
ஜூன் முதல் அபுதாபி- லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே நேரடி விமான சேவையை துவக்க தனது விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டிருந்த மத்திய கிழக்கு ஏர்லைன் நிறுவனம், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலேயே தனது விமான சேவையை துரிதமாக துவங்க தூண்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டிஹெட் நிறுவனத்திற்கு போயிங் 777 விமானகளை விற்பனை செய்வதை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கடந்த நவம்பரில் தெளிவுப்படுத்தியது.
விமான நிறுவன அதிகாரிகளின் கூற்றின் படி ஏர் இந்தியா நிறுவனம், தனது விமானங்களை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பாதைகள் தொடர்பான சிக்கல்களை முறியடிக்க கூட போராடியது. இந்த விமானங்கள் தடைகளை சந்திக்க முக்கிய காரணம் அதனை இயக்கத்திற்கான செலவுகளே ஆகும்.
ஒவ்வொரு விமானத்தினையும் ரூ1,400 கோடிக்கு வாங்கிய ஏர் இந்தியா நிறுவனம், தனது போயிங் ரக விமானங்களில் ஐந்தினை ஒவ்வொன்றினையும் வெறும் ரூ420 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளது. 2004ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஏர் இந்தியா நிறுவனம் 8 டிரிபிள் செவன் விமானங்களை வாங்க ரூ11,200 கோடி செலுத்தியது.
எஞ்சியுள்ள மூன்று போயிங் 777-200 எல்ஆர்எஸ் விமானங்களை விற்பனைக்கு முன்னிறுத்த ஏர் இந்தியா திட்டமிடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது மொத்தம் 44,000 கோடி கடனை கொண்டுள்ளது. இதில் பாதி தொகை விமானங்கள் தொடர்புடையது ஆகும். மீதியுள்ள தொகையில் கிட்டத்தட்ட ரூ18,00 கோடி ரூபாய் நீண்ட கால முதலீட்டு கடன்களாகும் என்று பினான்சியல் எக்ஸ்ப்ரெஸ் -டம் விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications