மும்பை: அன்னிய செலாவணி சொத்துக்கள் உயர்ந்ததன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவனிக் கையிருப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 294 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 1.26 பில்லியன் டாலர்கள் உயர்ந்து கையிருப்பு 292.33 பில்லியன் டாலர்களாக இருந்தது.
டாலரின் அடிப்படையிலான அன்னிய செலாவணிச் சொத்துக்கள் டாலர் அல்லாத யூரோ, பவுண்டு மற்றும் யென் ஆகியவற்றையும் அவற்றின் ஏற்ற இறக்கங்களை உள்ளடக்கியது. அந்த வாரத்தில், தங்கக் கையிருப்பு மதிப்பு மாற்றமின்றி 20.075 பில்லியன் டாலராக இருந்தது.
சிறப்பு நிதி பெறும் உரிமைகள் மூலம் 30.5 மில்லியன் டாலர் உயர்ந்து 4.459 பில்லியன் டாலராகவும், ஐஎம்எஃப்-இல் இந்தியாவின் கையிருப்பு 13.5 மில்லியன் டாலர் உயர்ந்து 2.007 பில்லியன் டாலராக உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்தது.
Share This Article
English summary
Forex reserves rise to $294 billion
The country's foreign exchange reserves surged by $1.46 billion to $293.79 billion in the week ended February 14, on account of increase in the currency assets, the Reserve Bank of India said on Friday.
Story first published: Tuesday, February 25, 2014, 19:56 [IST]