சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கப்பட்டுள்ள மோட்டார் வாகன மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்திக் கொள்கைகளின் கீழ் தமிழ்நாடு அரசு இந்தியாவில் முதன் முறையாக "ஆட்டோ சிட்டி" எனப்படும் மோட்டார் வாகன நகரத்தை அமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது "தமிழ்நாடு, மோட்டார் வாகன முதலீடுகளின் கூட்டாளி" என்ற தலைப்பின் கீழ் தொடங்கப்படும்.
மாநில அரசு இதற்கென மோட்டார் வாகன தொழில் வளர்ச்சி மையம் ஒன்றை நிர்மானித்து அதன் மூலம் முதலீட்டு வழிமுறை உதவிகளை இந்தத் துறையில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என கொள்கை ஆவனம் தெரிவிக்கிறது.
மேலும் இந்த மையம், ஒரு நல்ல கொள்கையை அரசு வகுக்க உதவிபுரியும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்த தேர்வாக அமையத் தேவையான வழிவகைகளை ஆராயவும் உதவிகரமாக இருக்கும்.
ஆட்டோ சிட்டி
இந்த மையத்தின் விவரப்படி, அரசு 1000 ஹெக்டேர் பரப்பளவுள்ள "ஆட்டோ சிட்டி" எனப்படும் ஒரு நவீன தொழிற்ப்பேட்டையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மோட்டார் வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் நிறுவனங்களுடன் கூட்டாக உருவாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தத் தொழிற்பேட்டையில் போக்குவரத்தை மேம்படுத்த மோட்டார்வாகன வழங்குனர் பூங்கா ஒன்றும் வரவுள்ளது
பூங்கவின் சிறப்பு
இந்த ஆட்டோ நகரம் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு பகிர்ந்தளிப்பு மையத்தையும், ஒரு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் கழிவு சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை வசதிகள் உள்ளிட்ட பொது கட்டமைப்புகளை கொண்டிருக்கும்.
24 மணி நேர சேவை
இந்த ஆட்டோ சிட்டி 24 மணி நேரமும் பல்வேறு துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு போக்குவரத்து வசதியையும் லாரிகள் இயக்கம் ஆகியவற்றையும் ஏற்படுத்தித் தரும். "இந்திய அரசு மற்றும் கப்பல் துறை, பல்வேறு துறைமுகங்களில் வாகன நிறுத்தங்களை அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்து பாராட்டும்" என அந்த கொள்கை ஆவனம் தெரிவிக்கிறது.
3 மாவட்டம்
கூடுதலாக, மாநில அரசு, திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய மோட்டார் வாகன உற்பத்தி நிலைகளை நிறுவ ஊக்குவிக்கும். தற்போது மதுரை மற்றும் கோவையிலுள்ள தொழிற் பகுதிகள் வலுப்படுத்தப்படும்.
சிப்காட்-இன் வெற்றி
சிப்காட், கோவை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் மோட்டார் வாகனத் தொழிற்ப் பேட்டையை ஊக்குவிப்பதோடு, கட்டமைப்புகள் மற்றும் பொது வசதிகளை மேம்படுத்தி சிறு மற்றும் நடுத்தர வாகன உதிரிபாக தொழில்களை ஈர்க்கும்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications