சென்னை: நாட்டில் சில்லரை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. பஸ், ஹோட்டல் என நாம் தினமும் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் சில்லரையின் தேவை அதிகளவில் உள்ளது. இந்நிலையில் சில்லரை தட்டுப்பாட்டை குறைக்க சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி இணைந்து தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் சுமார் 30 இடங்களில் தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி சார்பில் நிறுவப்பட்டது.
தானியங்கி இயந்திரம்
இத்திட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் மண்டலத் தலைவர் சதாகதுல்லா தானியங்கி நாணய இயந்திரத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சில்லரை
இந்த இயந்திரத்தில் 10 முதல் 50 ரூபாய் வரை சில்லரைகளை மாற்றிக்கொள்ளாம். மேலும் நம் தேவைக்கு ஏற்ப 1ரூ, 2ரூ, 5ரூ நாணயங்களாவும் மாற்றிக்கொள்ளலாம்.
பஸ் மற்றிம் ரயில் நிலையம், கோவில்
இத்தகைய இயந்திரங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையம், கோவில் மற்றும் ரயில் நிலையங்களில் நிறுவ இவ்வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
பாதுகாப்பு
மேலும் அனைத்து ஏடிஎம்களில் உள்ளது போலவே இந்த தானியங்கி நாணயம் இயந்திரங்களுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்படும் என் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதாகத்துல்லா கூறினார்.


Click it and Unblock the Notifications