இ-காமர்ஸ் துறையில் 56% வளர்ச்சி!! போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் முடங்கின..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: குளோபல் அனாலிட்டிகல் ஏஜென்ஸியான க்ரிஸில் சேகரித்துள்ள தகவல்களின் படி, இ-காமர்ஸ் என்றழைக்கப்படும் ஆன்லைன் ரீடெயில் துறையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் சுமார் 50-55% அளவு வளர்ச்சியடைந்து 2016ஆம் ஆண்டுக்குள் சுமார் 50,000 கோடி ரூபாயை எட்டி லாபகரமானதாகத் திகழும் என்று கூறுகின்றன. இது 2008ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 30 மடங்கு அதிகமாகும்.

 

இந்த விரிவாக்கம் நேரடி மற்றும் மறைமுக ஆன்லைன் ரீடெயில் சந்தைகள் இரண்டிலுமே காணப்படும். துரிதமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் துறையின் வருவாய், 56% என்ற வீதத்திலான மொத்த வருடாந்தர வளர்ச்சி விகிதத்துடன் 2008ஆம் நிதியாண்டில் சுமார் 1,500 கோடி ரூபாயாக இருந்த வளர்ச்சி 2013ஆம் நிதியாண்டில் சுமார் 13,900 கோடி ரூபாயாக உயர்ந்தது.

இ-காமர்ஸ் துறையில் 56% வளர்ச்சி!! போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் முடங்கின..

"ஆன்லைன் ரீடெயில் இந்தியாவில் தற்போதுள்ள ஆர்கனைஸ்டு ரீடெயில் சந்தையின் 8% பங்கு, 2016 ஆம் ஆண்டிற்குள் சுமார் 18% சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் கணிசமான அன்ஆர்கனைஸ்டு பிரிவு உள்ளிட்ட ஒட்டுமொத்த ரீடெயிலின் விகிதம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 1 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். ஆனாலும் இந்த ஆற்றல் மிகவும் பெரியதே", என்று தொழில்துறை ஆராய்ச்சி இயக்குனரான ராகுல் ப்ரிதியானி கூறியுள்ளார்.

ஜபாங் மற்றும் மின்ட்ரீ போன்ற இ-காமர்ஸ் பிராண்ட்களின் வளர்ந்து வரும் போட்டி கடந்த 4 முதல் 5 வருடங்களில் நேரடி ரீடெயிலர்களை ஆன்லைன் ரீடெயிலைங்கை தேர்வு செய்ய நிர்பந்தித்து வருகிறது. கெட்டுப் போகக்கூடிய நுகர்வோர் பொருட்களின் ரீடெயிலர்களான பிக்பாஸ்கர் மற்றும் லோக்கல்பான்யா ஆகியவையும் ஆன்லைன் சேவையை வழங்கவுள்ளன.

புத்தகங்கள் மற்றும் இசை நிறுவனங்கள் மிகப்பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. ஒன்று இந்நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஸ்டோர்கள் மூடப்பட்டுள்ளன அல்லது மொத்தமாக சில நிறுவனங்களே இழுத்து மூடப்பட்டுள்ளன. ஏனெனில், ஆன்லைன் ரீடெயிலர்களால் வழங்கப்படும் அளவுக்கதிகமான தள்ளுபடிகளுக்கு ஈடு கொடுத்து இவர்களால் போட்டியிட முடியாததே இதற்கு காரணமாகும் என்று க்ரிஸிலின் தகவலறிக்கை தெரிவிக்கிறது.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Online shopping getting dearer! E-commerce to grow to R 50,000 crore: Crisil

Global analytical agency Crisil has crunched data to reveal that E-commerce or online retail shall prosper hitting Rs. 50,000 by 2016 by growing at a rate of 50–55% over the next 3 years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X