சென்னை: இந்திய பெண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் தங்களை ஒரு அங்கமாக நிரூபித்து வருகின்றனர். வீடுகளில் மட்டும் ஆட்சி கொண்டிருந்த இந்தியப் பெண்கள் இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆட்சி செலுத்தத் துவங்கி விட்டனர். அதிலும் பெண்களை நம்பியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏராளம் என்றால் மிகையாகாது. இது இந்திய நாட்டிற்கு வலுவான வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லுவதற்கு ஒர் அறிகுறி.
நிதி மற்றும் வங்கி துறையிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். அதிகபடியான பெண்கள்வங்கியியல் துறை மற்றும் பண மேலான்மையில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நிறைய திட்டங்களை இன்றைய வங்கிகள் செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் பலன் தரக்கூடியதாகவும் தனித் தன்மையான வசதிகளையும் சில வங்கிகள் வழங்கி வருகின்றன. அது போன்ற சில வங்கி கணக்குகளைப் பற்றி உங்களுக்கு விளக்கம் கொடுக்கவே இந்த கட்டுரை! படித்து பயன்பெறுங்கள்.
ஐடிபிஐ வங்கி
சூப்பர்சக்தி (பெண்கள்) வங்கி கணக்கு - ஆண்கள் குணம், பழக்கம், வாழ்கை முறையில் முற்றிலும் மாறுபட்டவர்கள் பெண்கள். அதே போல அவர்களுடைய தேவைகளும் ஆண்களின் தேவைகளில் இருந்து மாறுபட்டிருக்கும். இந்த தேவைகளை மனதில் கொண்டு 'சூப்பர் சக்தி' என்ற பெண்களுக்கான வங்கி சேமிப்பு கணக்கினை ஐடிபிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
அவளுடைய குழந்தைகளுக்கு 'ஜீரோ' பேலன்ஜ் சேமிப்பு கணக்கினை இந்த கணக்கு வழங்குகிறது; குழந்தைகள் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கணக்கிற்கும் ஆட்டோ-ஸ்வீப் வசதியும் உள்ளது. ரூ.15,000-க்கும் மேல் வாடிக்கையாளர் டெபாசிட் செய்தவுடன் அவர் ஆட்டோ-ஸ்வீப் வசதியைப் பெறுவார். சர்வதேச அளவில் பயன்படத்தக்க ஏ.டி.எம் டெபிட் கார்டை வழங்கும் இந்த திட்டத்தில், 25 சதவிகித தள்ளுபடியுடனான பாதுகாப்பு பெட்டக வசதியையும் பெண்கள் பெற முடியும்.
ஐசிஐசிஐ வங்கி
அட்வான்டேஜ் பெண்கள் சேமிப்பு கணக்கு - இந்தியாவின் எந்தவொரு பகுதியில் வசித்து வரும் பெண்களுக்கும் இந்த அட்வான்டேஜ் பெண்கள் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.
ஜீரோ பேலன்ஸ் கணக்குடன், இலவசமான செக் புத்தகமும் இந்த கணக்கிற்கு வழங்கப்படுகிறது. இந்த தொடர் வைப்பு கணக்கில் ரூ.20,000 இருக்க வேண்டும்.
இணையம் மற்றும் மொபைல் வழி வங்கி சேவைகளை இயல்பாகவே வழங்கும் கணக்காக இது உள்ளது. இந்த வசதியின் மூலம் இந்தியாவின் எந்தவொரு பகுதியில் இருந்தும் பயன்படுத்தலாம். எண்ணற்ற தள்ளுபடிகளையும் மற்றும் சலுகைகளையும் அதன் சர்வதேச டெபிட் கார்டுகள் வழியாக வழங்கும் வகையில் இந்த கணக்கு உள்ளது.
ஆக்சிஸ் வங்கி
பெண்களுக்கான சேமிப்பு கணக்கு - தங்களுடைய குறிக்கோள்கள் மற்றும் சலுகைகளைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளவர்களாக ஆக்ஸிஸ் வங்கியினர் உள்ளனர். 'தேவைக்கு பொருந்தும் வகையிலான வங்கி சேவைகள்' என்பதே அவர்களுடைய சேவை, என்று குறிப்பிடுகிறாரகள்.
மேலும் கிராமப் பகுதிகளில் இந்த வங்கியியன் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது.
இந்த கணக்கில், நகரங்களில் வசிக்கும் பெண்கள் காலாண்டிற்கு ரூ.5000யை இருப்பாகவும், பாதி-நகர (வளரும்) பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் காலாண்டிற்கு ரூ.2500-ஐ இருப்பாகவும் மற்றும் கிராமப் புறங்களைச் சேர்ந்த பெண்கள் ரூ.1000-ஐ இருப்பாகவும் வைக்கலாம். ஒவ்வொரு கணக்கிற்கும் இலவச செக் புத்தகமும், இணைய வழி மற்றும் எஸ்.எம்.எஸ் வழி வங்கி சேவைகளும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
சௌத் இந்தியன் வங்கி
எஸ்ஐபி மஹிளா- சௌத் இந்தியன் வங்கி, மஹிளா சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் மஹிளா ப்ளஸ் வங்கி சேமிப்பு கணக்கு என இரண்டு வகையான சேமிப்பு கணக்குகளை பெண்களுக்கு வழங்குகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட இந்திய பெண்கள் இந்த கணக்குகளை தொடங்க முடியும். இந்த வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கணக்கு தொடங்கப்பட்ட முதல் ஆண்டுக்கு இலவசமாக காப்பீடு செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த காப்பீடு பயணம் மற்றும் விபத்தினால் மரணம் சம்பவிப்பது போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
ரூ.1000-ஐ குறைந்த பட்ச இருப்பு தொகையாக கொண்டு மஹிளா சேமிப்பு கணக்கையும் மற்றும் ரூ.25,000-ஐ குறைந்த பட்ச இருப்பு தொகையாக கொண்டு மஹிளா ப்ளர் சேமிப்பு கணக்கையும் பெண்கள் துவங்க முடியும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி
பெண்கள் சேமிப்பு கணக்கு - பெண் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான சேவைகளை ஹெச்டிஎஃப்சி வங்கி வழங்கியுள்ளது. இந்த வங்கி வழங்கும் ஈஸிஷாப் விமன் அட்வான்டேஜ் டெபிட் கார்டு மூலம் பெண்கள் ஒரு நாளைக்கு ரூ.25,000 வரையிலும் பணம் எடுக்கவும் மற்றும் ரூ.40,000 வரையிலும் பொருட்களை கடைகளில் வாங்கவும் முடியும்.
விபத்து மூலம் மரணம் சம்பவித்தால் ரூ.10 இலட்சம் மற்றும் விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.1 இலட்சம் என காப்பீடும் செய்து தருகிறது இந்த வங்கி. தங்க நகை கடன்களைப் பொறுத்த வரையில் இந்த வங்கி சிறப்பான தள்ளுபடி திட்டங்களை கொண்டுள்ளது.
பாரத மஹிளா வங்கி
இவ்வங்கி முற்றிலும் பெண்களுக்கான உருவாக்கப்பட்ட இந்திய வங்கி. இந்த வங்கி பெண்களுக்கு எந்த வங்கி அளிக்க முடியாத பல சலுகைகளுடன் வங்கி சேவையை அளித்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications