மும்பை: புதிய ஆய்வின் கூற்றின்படி 2014ஆம் ஆண்டில் ஊழியர்கள் 10 % ஊதிய உயர்வை மட்டுமே பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய நிதி நெருக்கடியின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் நிலையற்றதாக இருந்த 2009ஆம் ஆண்டை தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டிருக்கும் மிக குறைந்த சம்பள உயர்வு இதுவே!
ஏயான் ஹெவிட் நிறுவனத்தை சேர்ந்த ஹியூமன் ரீசோர்சஸ் ஸொல்யூஸன்ஸ் பிஸினஸ் ஆஃப் ஏயான் நடத்திய சர்வேவில் இந்த உயர்வு செப்டம்பர் 2013இல் ஏற்படுத்தப்பட்ட கணிப்பை விட சற்று அதிகம் என தெரிவித்தது.
நுகர்வோர் நிறுவனங்கள்
மருந்து பொருட்கள், இரசாயனம், பொறியியல் சேவைகள் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களை உற்சாகப்படுத்த போதிய காரணங்கள் உள்ளன. அவர்கள் 10% முதல் 12% வரையிலான சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். ஊதியத்திற்கான செலவுகள் மொத்த செலவிற்கான கட்டமைப்பில் ஒரு சிறிய சதவீதத்தை உருவாக்குவதால், இந்த துறைகள் உள்நாட்டு பொருளாதாரத்தை பெரிதளவில் சார்ந்துள்ளன.
சில்லறை வணிகம், நிதி சேவை நிறுவனங்கள்
எனினும் ஊதியத்திற்கான செலவுகள், மொத்த செலவிற்கான கட்டமைப்பில் முக்கிய அங்கமாக பங்கு வகிக்கும் விருந்தோம்பல் ,சில்லறை வணிகம் மற்றும் நிதி சேவை போன்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வு பெறுவர் என தெரிகிறது.
ஊதிய உயர்வு மிகவும் குறைவு
2013ஆம் ஆண்டில் வழங்கிய ஊதிய உயர்வுடன் ஒப்பிடும்போது 2014ஆம் ஆண்டில் 69 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் வழங்கப்பட ஊதிய உயர்வு பட்ஜெட்டை குறைத்துள்ளன என்ற தகவலையும் அந்த ஆய்வு கூடுதலாக தெரிவிக்கிறது.
செயல்திறன் அடிப்படை
ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும் ஊழியர்களுக்கு 15.3% ஊதிய உயர்வை வழங்கி அவர்களை தீவிரமாக வேறுபடுத்தி காட்டுவதற்கும் நிறுவனங்கள் தயங்குவதில்லை.
ஏயான் ஹெவிட் (Aon Hewitt)
ஏயான் ஹெவிட் இந்தியாவின் சம்பள வெகுமதி ஆலோசனை தலைவரான ஆனந்தொறுப் கோஷ், இது குறித்து பேசுகையில் சம்பள மேலாண்மை நிர்வாகத்தின் அணுகுமுறையில் மிகவும் தனித்துவமான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் சுருங்கும் சம்பள பட்ஜெட்டை கொண்டு நிறுவனங்கள், சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு உயர்ந்த சம்பள உயர்வினை வழங்குகின்றன என்றும் கூறினார்.
சர்வே
டிசம்பர் 2013 - ஜனவரி 2014 -ல் ஏயான் ஹெவிட், 565 நிறுவனங்களுக்கிடையே இந்த ஆய்வியானி நடத்தி தகவல்களை சேகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications