விற்பனையில் சரிவு!! பன்நாட்டு நிறுவனங்களிடம் கடும் போட்டி!! மாருதி சுசுகி..

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் 1,09,104 கார்களை மட்டுமே விற்றுள்ளது. இதனால் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் சரிவை கண்டது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,09,567 கார்களை விற்றது குறிப்பிடதக்கது.

நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் 1.8% உள்நாட்டு விற்பனை உயர்ந்து 99,758 அலகுகள் விற்பனையை கொண்டிருந்த நிறுவனம், கடந்த 2013 பிப்ரவரியில் 97,955 அலகுகள் விற்பனையை கொண்டிருந்ததாக தெரிவித்தது.

ஆல்டோ, ஏ-ஸ்டார்

ஆல்டோ, ஏ-ஸ்டார்

சிறிய ரக கார்களான எம்800, ஆல்டோ, ஏ-ஸ்டார் மற்றும் வேகன்-ஆர் ஆகியவற்றின் விற்பனை 9.6% (37,342 கார்கள்)குறைந்தது. இது சென்ற வருடம் இதே மாதத்தில் 41,311 அலகுகளாக இருந்தது என்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்விஃப்ட், எஸ்டிலோ

ஸ்விஃப்ட், எஸ்டிலோ

சிறிய ரக அடக்கமான கார்களான ஸ்விஃப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ் ஆகியவற்றின் விற்பனை பிப்ரவரியில் 19.4% அதாவது (28,672 கார்கள்) அதிகரித்துள்ளது. இதுவே சென்ற வருடம் இதே மாதம் 24,021 கார்களாக இருந்தது குறிப்பிடதக்கது.

எஸ்எக்ஸ்4

எஸ்எக்ஸ்4

நிறுவனத்தின் நடுத்தர அளவுடைய செடான் எஸ்எக்ஸ்4 6% விற்பனை உயர்வினை பதிவு செய்து அதாவது 228 அலகுகள் விற்பனையை கொண்டிருந்தது.சென்ற வருடம் இதன் விற்பனை 215 அலகுகளாக இருந்தது.இந்த மாதத்தில் பிரிமியம் சேடன் கிஜாஷி,எந்த விற்பனையையும் பெற வில்லை.

கிராண்ட் விடாரா, எர்டிகா

கிராண்ட் விடாரா, எர்டிகா

பயன்பாட்டு ரக வாகனங்களான, ஜிப்சி கிராண்ட் விடாரா மற்றும் எர்டிகா ஆகியவற்றின் விற்பனை, சென்ற வருடம் இதே மாதம் கொண்டிருந்த 5,957 வாகன விற்பனையிலிருந்து 12.2% குறைந்து 5,231 வாகனங்ளாக இருந்தது.

ஈகோ

ஈகோ

முந்தைய ஆண்டு இதே காலத்தில் 8,133 அலகுகளாக இருந்த வேன்கள் ஆம்னி ஈகோ ஆகியவற்றின் விற்பனை இந்த பிப்ரவரியில் 22.1% உயர்ந்து 9,932 அலகுகள் ஆக இருந்தது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

நிறுவனந்தின் இந்த மாதத்திற்கான மொத்த ஏற்றுமதி,சென்ற வருடம் இதே மாதம் இருந்த 11,612 அலகுகளிருந்து 19.5% குறைந்து, 9,346 அலகுகளாக இருந்தது என்று எம்எஸ்ஐ தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+