10 ஆண்டுகளில் மோசமான வளர்ச்சியை எட்டிய இந்தியப் பொருளாதாரம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நம் அனைவரின் பார்வையும் குறைந்து வரும் மொத்த தேசிய உற்பத்தியை (GDP) நோக்கி இருக்கும் வேளையில், "நடப்பு நிதியாண்டில் மீதமிருக்கும் இரு காலாண்டுகளிலும் நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதம் 5.2% இருக்கும்" என்று நிதியமைச்சர் ஒரு பேட்டியில் திரு ப.சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் அவருடைய யூகம் தவறாகிப் போனது!!

 

மத்திய அரசின் மதிப்பீடுகளுக்கு மாறாக மூன்றாவது காலண்டின் வளர்ச்சி விகிதம் 4.7% மட்டுமே வளர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் குறிப்பிட்டுள்ளன. இது நம்பிக்கையில்லாமல் கருத்து தெரிவிப்பவர்களின் குறியீடான 4.9% வளர்ச்சிக்கும் குறைவானதாக உள்ளது.

மத்திய அரசின் சாதனை

மத்திய அரசின் சாதனை

6.1% வளர்ச்சியை பெறும் நோக்கில் இந்த ஆண்டைத் துவங்கிய மத்திய அரசு, நாளடைவில் இந்த இலக்கை அடைய முடியாமல் தொடர்ச்சியாக குறைத்துவிட்டது. இதற்காக அனைவரையும் குறை கூறிக் கொண்டிருந்தாலும், தன்னுடைய சொந்த கொள்கைகளையே குறை கூறுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

5.2% வளர்ச்சி

5.2% வளர்ச்சி

சில நாட்களுக்கு முன்னர் நிதியமைச்சர் தன்னுடைய பட்ஜெட்டுக்கு முந்தைய உரையை நிகழ்த்திய போது கூட சரியான விபரங்களை அவரால் பெற முடியவில்லை. முதல் அரையாண்டில் 4.9% ஆக இருக்கும் என்று அவர் நினைத்த வளர்ச்சி 4.6% வளர்ச்சியை மட்டுமே கொடுத்தது. ஆனால், அவருடைய கணக்குப் படி 2-வது அரையாண்டில் இந்த வளர்ச்சி 5.2% ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்பொழுது இருக்கும் 4.7% வளர்ச்சி 5.7% அளவிற்கு எப்படி வளரும் என்பது அவருக்கே தெரியவில்லை.

நிதி பற்றாக்குறை
 

நிதி பற்றாக்குறை

அரசு வெளியிட்டிருக்கும் மற்றொரு புள்ளி விபரத்தின் படி, தற்போதைய வளர்ச்சி விகிதத்தை பராமரித்து வருவது கடினமான விஷயமாகும். 2013-14ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் நிதி பற்றாக்குறையானது, ஒட்டுமொத்த ஆண்டின் இலக்கையே தாண்டி சென்று விட்டது.

 செலவினங்கள்

செலவினங்கள்

முன்பு எதிர்பார்த்தபடி மொத்த தேசிய உற்பத்தியை 4.6% இல் இருந்து 4.8% ஆக கொண்டு வந்து இந்த பற்றாக்குறையை குறைக்க முடியும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பட்ஜெட்டை தாண்டி இலக்கு சென்று விட்ட போது, இந்த இலக்கை அடைய, அரசாங்கம் அதன் செலவினங்களை மேலும் அதிகரிக்கும்.

10 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி

10 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி

செலவினங்களுடன் சேர்த்து, தன்னுடைய வளர்ச்சிக்கான இலக்கை நிதியமைச்சர் இந்த நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக குறைத்து, கடந்த பத்து ஆண்டுகளிலேயே மிகவும் குறைவான வளர்ச்சியை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Q3 GDP at 4.7%; economy heads towards worst year in decade

All signs pointed towards a lower GDP print, yet the finance minister bravely hinted that the remaining two quarters of the current fiscal could post a growth of 5.2%. Well he is wrong.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X