டெல்லி: யாஹூ நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய அருண் தடான்கியின் இடத்தை நிரப்பும் பொருட்டு, குர்மித் சிங்கை இந்திய செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குனராக கடந்த புதனன்று இந்நிறுவனம் நியமனம் செய்தது.
யாஹூவின் வணிகத்தை இந்தியாவில் நிர்வகிக்கும் பொறுப்பும், அதன் வளர்ச்சியை நாட்டில் மேம்படுத்தும் பொறுப்பும் குர்மித்சிங்கை சார்ந்தது என்றும் அவர் தனது புதிய பொறுப்பை உடனடியாக ஏற்று கொள்வார் என்றும் யாஹூ தெரிவித்துள்ளது.
குர்மித் சிங்
குர்மித் சிங் தனது தற்போது போர்ப்ஸ் இந்தியா இதழின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகி யாஹூ இந்தியாவுடன் கூடிய விரைவில் இணைய உள்ளார்.
ய்வொன் சாங்
யாஹூ நிறுவனத்தின் துணை தலைவரும் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு தலைவருமான ய்வொன் சாங் இது குறித்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
யாஹூ நிறுவனம்
நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வலுவான ஆற்றலை தன் வசம் கொண்டுள்ள குர்மித் யாஹூவுடன் இணைந்துள்ளார். பயனாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களை புரிந்து கொண்டு செயலாற்றும் அவரது திறன் யாஹூ நிறுவனந்திற்கு கிடைத்த மிக சிறந்த சொத்து என்றும், அவரது இந்த திறன் பயனுள்ள புதுமையான பல தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் என்றும் சாங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
20 வருட தொழில் அனுபவம்
தனது 20 வருட தொழில் சார்ந்த வாழ்க்கையில், நுகர்வோர் பொருட்கள், இசை மற்றும் பொழுதுபோக்கு மற்றும் ஊடகம், ஆகிய துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களான,சோனி மியூசிக் எண்டர்டைன்மெண்ட் லிமிடெட்,ஹெச்டி மீடியா லிமிடெட்,தெ இந்தியா டுடே குழுமம், ராஜஸ்ரீ மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மேரிகோ லிமிடெட் போன்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்பை நிர்வகித்துள்ளார்.
குர்மித் சிங் பெற்ற தங்க பதக்கம்
அவர் டில்லி பல்கலைகழகத்தில், மேலாண்மை கல்வி பிரிவில் வணிக நிர்வாக பட்டதாரி ஆவார். அவர் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைகழகத்தில் எந்திர பொறியியல் பாட பிரிவில் தங்க பதக்கம் பெற்றராவார்.


Click it and Unblock the Notifications