50 நாட்டு சந்தைகளை அடைவதே எங்களின் லட்சியம்!! ஹீரோ மோட்டோகார்ப்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இரு சக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் மிக பெரிய நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அஸ்யா மகினா உடன் விநியோக ஒப்பந்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக துருக்கியில் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.

 

சொய்சால் குழுமத்தின் துணை நிறுவனமான அஸ்யா மகினா, துருக்கியில் விரிந்து பரவியுள்ள தனது 50 விற்பனை நிலையங்கள் மூலம், ஹீரோ மோடோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை நாடு முழுவதும் விநியோகிக்கும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கபட்டுள்ளது.

துருக்கியில் ஹீரோ மோட்டோகார்ப்

துருக்கியில் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துருக்கியை சேர்ந்த பங்குதாரரான அஸ்யா மகினா, அடுத்த ஒரு வருடத்திற்குள் மேலும் பல புதிய விற்பனை நிலையங்களை துவக்க இருக்கிறது. இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனம், 125சிசி மோட்டார் சைக்கிள் கிளாமர்,150சிசி பைக் த்ரில்லர், 100சிசி ஸ்கூட்டர் ப்ளஷர் ஆகியவற்றை யூரோ-III மாசு விதிமுறைகளுக்கு இசைந்து செயல்படும் வண்ணம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் - அஸ்யா மகினா

ஹீரோ மோட்டோகார்ப் - அஸ்யா மகினா

சொய்சால் குழுமத்தின் அமைப்பு குழு இயக்குனர்களின் தலைவரின் முன்னிலையில், ஹீரோ அஸ்யா வணிக ஒப்பந்த விற்பனயை, ஹீரோ மோடோகார்ப் -ன் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பவன் முஞ்சால் இஸ்தான்புலில் உள்ள கேம்லிக்காவில் தொடங்கி வைத்தார்.

பவன் முஞ்சால்
 

பவன் முஞ்சால்

விழாவில் பேசிய, முஞ்சால், " எங்கள் திட்டங்களை உலகளாவிய வகையில் விரிவாக்கும் செய்யும் முயற்சியில் துருக்கியில் எங்கள் நடவடிக்கைகளை தொடங்குவது ஒரு முக்கியமான மைல் கல்" என அவர் தெரிவித்தார்.

சிக்கனமான ​​எரிபொருள் திறன்

சிக்கனமான ​​எரிபொருள் திறன்

மேலும் துருக்கி முழுவதும் உள்ள ஒவ்வொரு இரண்டு சக்கர வாடிக்கையாளருக்கும் வசதியானதும், சிக்கனமான ​​எரிபொருள் திறன் இயக்கதுடன் கூடிய சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம் என்றும் 5% சந்தை பங்கு இலக்கை எட்ட எங்களால் முடியும் என்றும் அதன் பொருட்டு மேலும் அதிக பைக்குகளை நிறுவனத்தின் மூலம் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.

50 உலக சந்தைகள்

50 உலக சந்தைகள்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பவன் முஞ்சால் 2020ஆம் ஆண்டுக்குள் 50 உலக சந்தைகளை அடையவோம் என நம்பிக்கையுடந் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: money sales விற்பனை
English summary

Hero MotoCorp launches operations in Turkey

The country’s largest two-wheeler maker Hero MotoCorp on Thursday launched its operations in Turkey by entering into a distribution agreement with Asya Makina.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X