டெல்லி: மொபைல் சாதனங்கள் மூலம் சைபர் குற்றங்கள் என்று கூறப்படும் இணையதள தாக்குதல்களினால் பாதிப்பிற்குள்ளாகும் இரண்டாவது நாடு இந்தியா என மென்பொருள் நிறுவனமான காஸ்பேர்ஸ்க்கி தெரிவிக்கிறது.
மின்னணு தொடர்பு மூலம் வாடிக்கையாளரின் பாஸ்வேர்ட், உபயோகிப்பாளர் பெயர், கிரடிட் கார்ட் விபரங்கள் போன்றவற்றை சேகரிக்க முயலும் பிஷிங் முறை வங்கி விபரங்களை திருடுதல் போன்ற செயல்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான காஸ்பேர்ஸ்க்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்ய முதல் இடம்
ரஷ்ய சைபர் பாதுகாப்பு தீர்வுகள் நிறுவனமான காஸ்பேர்ஸ்க்கி, மொபைல் சாதனங்கள் மூலம் இணைய தாக்குதல்கள் நடைபெறுவதில் 40.34% தாக்குதலுக்குட்பட்ட பயானாளர்களை கொண்டு ரஷ்யா பட்டியலில் முதலிடம் பெறுகிறது என்று தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடம்
இந்தியா 7.9% தாக்குதல்களை பெற்று பட்டியலில் இரண்டாவது இடம் பெறுகிறது.
யூகே, வியட்நாம், உக்ரைன்
அதனை தொடர்ந்து வியட்நாம் (3.96 %), உக்ரைன் (3.84%) மற்றும் யூகே(3.42%) ஆகிய நாடுகள் பட்டியலில் இடம் பெறுகின்றன.
மற்ற நாடுகள்
பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மற்ற நாடுகள் பின்வருமாறு ஜெர்மனி (3.2 %), கஜகஸ்தான் (2.88 %), அமெரிக்க (2.13 %), மலேஷியா (2.12% ) மற்றும் ஈரான் (2.01 %).
தீங்கிழைக்கும் மென்பொருள்
மொபைல் சாதனங்களில் தீங்கிழைக்கும் மென்பொருள் 2013ஆம் ஆண்டில் 100,௦௦௦ இருந்ததாககண்டறியப்பட்டது. இது அதன் முந்தைய வருடத்தில் இருந்த 40,059 மாதிரிகளை விட இரு மடங்கு அதிகமாகியுள்ளது என்று காஸ்பேர்ஸ்க்கி தெரிவித்துள்ளது.
அண்ட்ராய்டு
சைபர் குற்றவாளிகளால் நான்கு மில்லியன் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் பயன்படுத்தப்பட்டு, அண்ட்ராய்டு-யை அடிப்படையாக கொண்ட மொபைல் சாதனங்களுக்கு அவ்வகையான தீங்கிழைக்கும் பயன்பாடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
பணத்திருட்டு
2013 - ல் நடைபெற்ற இந்த வகையான தீங்கிழைக்கும் குற்றங்கள் பணத்தினை குறியாக கொண்டு நடந்துள்ளன. எண்ணற்ற மொபைல் தீங்கிழைக்கும் திட்டங்களான பிசிங் முறையில் வங்கி கணக்குகளில் இருந்து வங்கி அட்டை தகவல் மற்றும் பணம் திருட்டு போன்ற செயல்களுக்காக வடிவமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
காஸ்பேர்ஸ்க்கி நிறுவனத்தின் முயற்சி
பேங்கிங் ட்ரோஜன்ஸ் என்று சொல்ல படுகிற விடாமுயற்சியுடன் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட முயன்ற 2,500 தீங்கிழைக்கும் முயற்சிகளை தான் தடை செய்துள்ளதாக காஸ்பேர்ஸ்க்கி தெரிவித்துள்ளது.
அண்ட்ராய்டு புகழ்
ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பின் கட்டமைப்பு மற்றும் பெருகி வரும் அதன் புகழ் ஆகியவையே ஆண்ட்ராய்ட் பேங்கிங் ட்ரோஜன் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாகும்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications