சென்னை: மார்ச் மாதத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை மும்பை பங்குசந்தையில் சுமார் 173 புள்ளிகள் சரிந்து 21,000 புள்ளிகளுக்கும் குறைவான அளவீட்டை பதிவு செய்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வேலையில் பங்கு சந்தை, அன்னிய முதலீடு, அதிகப்படியான ஏற்றுமதி என முக்கிய துறைகளில் முன்னேற்றம் அடைய அனைத்து முதலீட்டாளர்களும், நிதித்துறை அதிகரிகளும் எதிர்பார்க்கும் நிலையில் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் காரணமாக உலகளவில் பங்கு சந்தைகள் பெருந்த சரிவை சந்தித்து உள்ளது.
ரஷ்யா-உக்ரைன்
இப்போது ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் கடுமையான வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது. (ஏற்கனவே சிதம்பரம் ஐயா காரணம் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார், இவருக்கு பொருளாதார வீழ்ச்சியை மறைக்க சரியான தகவல் சிக்கியது.)
பங்கு சந்தை
போர் சூழல் காரணமாக மும்பை பங்கு சந்தை மட்டும் அல்லாது உலக பங்கு சந்தைகள் அனைத்தும் நேற்று சரிவில் தத்தளித்தன. இதில மும்பை பங்கு சந்தையில் 173 புள்ளிகள் சரிந்து 20,946.65 புள்ளிகளை அடைந்தன. அதேபோல் நிப்டியில் 55.50 புள்ளிகள் சரிந்து 6,221.45 புள்ளிகளை அடைந்தது.
டாப் 30 நிறுவனங்கள்
மேலும் அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக சென்செக்ஸ் புள்ளிகளை அளவிடும் 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் விலை சரிவைடைந்தது. இந்த 25 நிறுவனங்களில் பெல், டாக்டர் ரெட்டி, சன் பார்மா, டிசிஎஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி பெருமளவில் சரிந்தன. ஐடிசி போன்ற நுகர்வோர் நிறுவனங்கள் மட்டுமே உயர்வை கண்டது.
இன்றைய பங்கு சந்தை
ஆனால் இன்று பங்கு சந்தை நிலை மாறியது என்றே சொல்லாம். இன்று காலை முதலே பங்குசந்தை ஏறுமுகத்தில் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. நேற்று முடிவடைந்த பங்கு சந்தை நிலை இன்று 267.66 உயர்ந்து 21214.31 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar



Click it and Unblock the Notifications