டெல்லி: தபால் நிலையங்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 0.2 சதவிதம் அதிகரிக்க நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களை குறித்து ஷியாமளா கோபிநாத் அவர்களின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் படி, நிதி அமைச்சகம் அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டி வகித்தை மாற்ற ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்புதலின் அடிப்படையில் அஞ்சலக நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் 0.2 சதவிதம் அதிகரித்தது. இந்த வட்டி அதிகரிப்பால் தபால் நிலையை வைப்பு நிதி வடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தபால் துறையில் முதலீடு அதிகரிக்கும்
இந்த வட்டி அதிகாரிப்பால் தபால் துறையில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அக்குழு தெரிவித்தது. தபால் துறை வங்கி திறப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே, இந்த அதிகப்படியான முதலீடு தபால் துறை வங்கி செயல்பட பெரிதும் உதவும் எனவும் அக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வைப்பு நிதி
குறைந்த கால வைப்பு நிதிகளான 1 மற்றும் 2 ஆண்டு திட்டத்திற்கு 8.2 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான வைப்பு நிதிகளுக்கு 0.1 சதவீதம் அதிகரித்து 8.4 மற்றும் 8.5 சதவீதமாக நிர்ணயம் செய்யதுள்ளது.
ரெக்கரிங் டெபாசிட்
மக்கள் அதிகம் விரும்பும் 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு (ஆர்.டி) 8.3 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎஃப் திட்டத்தின் வட்டி வகித்தில் எந்தொரு மாற்றம் இல்லை. பிபிஎஃப் டெபாசிட் உச்சவரம்பு ஒரு லட்சம் மற்றும் வட்டி விகிதம் 8.7 சதவீதமாகவே நீடிக்கிறது.
தேசிய சேமிப்பு திட்டம் (NSE)
அதுபோல், தேசிய சேமிப்பு திட்டம் (என்எஸ்சி) மற்றும் மாதாந்திர வருவாய் திட்ட வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications