சின்ன கல்லு பெத்த லாபம்!!.. தலைப்புக்கு ஏற்ற சில நிறுவனங்கள்..

சென்னை: இந்த டயலாக் எதோ படத்தில் கேட்டது போல் தோன்றுகிறதா.. சரி தான் பஞ்ச தந்திரம் படத்தில் இந்த டயலாக் மிகவும் பிரபலம். தலைப்புக்கு எற்றார் போல் சில நிறுவனங்கள் சிறு முதலீட்டை கொண்டு, குறைந்த காலத்தில் 100 கோடி மதிப்பிலான நிறுவனங்களாக உயர்ந்துள்ளது.

இந்த இமாலய வளர்ச்சி அனைவருக்கும் சாத்தியம் இல்லை.. சிலருக்கும் மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அப்படிபட்ட நிறுவனங்களை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.

பணம் மட்டும் போதும் பாஸ்...

பணம் மட்டும் போதும் பாஸ்...

ஒரு நிறுவனத்தை தொடங்குவது மிகவும் கடினம், (பணம் ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்று நீங்கள் சொல்லலாம்.. இது முற்றிலும் தவறு..) அப்படி நிறுவனத்தை தொடங்கினாலும் பல பிரச்சனைகள் உள்ளது. இதனை அனைத்து கடந்து தான் லாபத்தை ஈட்ட முடியும்.

0.00006 சதவீத வாய்ப்பு

0.00006 சதவீத வாய்ப்பு

"100 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக ஒரு நிறுவனம் மாறுவதற்கு 0.00006 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளது", என்று, நிறுவனத்தை துவங்கிய 6 வருடத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பை அடைந்த கிளைமேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் ஃப்ரைட்பெர்க் கூறியுள்ளார்.

வால் ஸ்ட்ரீட்

வால் ஸ்ட்ரீட்

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கொடுத்த விவரங்களின் அடிப்படையில், சில நிறுவனங்கள் 100 கோடி என்னும் உச்சத்தை அடைந்துள்ளது. அப்படிபட்ட 10 நிறுவனங்களை பற்றி இங்கு பார்க்கலாமா?

ப்லூம் எனெர்ஜி

ப்லூம் எனெர்ஜி

ப்லூம் எனெர்ஜி நிறுவனத்தின் தலைவரி K.R.ஸ்ரீதர் என்பவர். இவர் ஒரு தமிழர்!!. ப்லூம் எனர்ஜி நிறுவனத்தின் மதிப்பு ரூ.290 கோடியாகும். இந்நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்யும் எனெர்ஜி சர்வர் தயாரிப்பில் ஈடுபடுகிறது. இந்த சர்வர்கள் உயிரிய வளங்களின் மூலம் உள்ளீடை எடுத்துக் கொள்வதால் சுத்தமான எனெர்ஜியை தயாரிக்கிறது. இதுவே இது ஜெயிப்பதற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. இந்நிறுவனம் தொடங்கிய 2001-ஆம் வருடம் முதல் வால்மார்ட், ஏடி அண்டு டி, ஃபெட்-எக்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, கூகிள் மற்றும் ஈ-பே போன்ற பெருமை வாய்ந்த வாடிக்கையாளர்களை இது கொண்டுள்ளது.

பலன்டிர் டெக்னாலஜீஸ்

பலன்டிர் டெக்னாலஜீஸ்

பலன்டிர் டெக்னாலஜீஸ் என்பது டேட்டா அனலிடிக்ஸ் மென்பொருளில் தனிச்சிறப்பை கொண்ட நிறுவனம். இந்நிறுவனத்தின் மதிப்பு 900 கோடியாகும். பலன்டிர் கோத்தம் மற்றும் பலன்டிர் மெட்ரோபோலிஸ் என்ற இரண்டு மென்பொருளை கொண்டுள்ளது. அரசின் தரவுப் பகுப்பாய்வு தேவைகளை பூர்த்தி செய்ய பலன்டிர் கோத்தம் உதவுகிறது. நிதி சார்ந்த தரவுப் பகுப்பாய்வு மற்றும் முன்கூறு தரவுப் பகுப்பாய்வு சம்பந்தப்பட்டது பலன்டிர் மெட்ரோபோலிஸ். அமெரிக்க புலனாய்வு பிரிவான சிஐஏ அங்கத்தை சேர்ந்த இன்-க்யூ-டெல் இதன் ஆரம்ப காலத்து முதலீட்டாளராக திகழ்ந்தன.

ஃபனாடிக்ஸ்

ஃபனாடிக்ஸ்

ஃபனாடிக்ஸ் என்ற இணையதள சில்லறை வர்த்தக நிறுவனம் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் மதிப்பு 150 கோடி ரூபாயாகும் இந்நிறுவனம் ஃபனாடிக்ஸ் மற்றும் பேன்ஸ்எட்ஜ் என்ற இரு பிரிவுகளை கொண்டுள்ளது. அவர்களிடம் 10 லட்ச சதுர அடி கொண்ட கிடங்கு உள்ளது. 2013ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 170 கோடி ரூபாய் நிதி திராட்டியது குறிப்பிடதக்கது.

பின்-இன்ரெஸ்ட்

பின்-இன்ரெஸ்ட்

புகைப்படங்களை புதுமையாக பகிர்வு செய்யும் தளம் இது. குறைந்த காலத்தில் மிகப்பெரிய லாபம் அடைந்தது. இந்நிறுவனத்தின் மதிப்பு 380கோடி. புகைப்படங்களை நிகழ்வுகள், விருப்பங்கள், உணவுகள் போன்ற பல தீன்மைகளின் அடிப்படையில் பயனாளிகள் வகைப்படுத்த இது உதவுகிறது. பின்-இன்ரெஸ்ட்டில் உறுப்பினராக எந்த ஒரு அழைப்பிதழும் தேவையில்லை. 2011-ல் அவர்கள் அறிமுகப்படுத்திய ஐ-போன் ஆப் அவர்களுக்கு பெரும் புகழை தேடி தந்தது. '2011-ன் 50 சிறந்த இணையதளங்கள்' என்று டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இது இடம் பிடித்திருந்தது.

டிராப்பாக்ஸ்

டிராப்பாக்ஸ்

மக்களுக்கு கிளவுட் அடிப்படையிலான சேமிப்பு அமைப்பை டிராப்பாக்ஸ் அளிக்கிறது. தங்களின் சொந்த விவரக் குறிப்பு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு கோப்பாக சேமித்துக் கொள்ள பயனாளிகளுக்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. சேமித்த கோப்புகளை இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக அணுகிக்கொள்ளலாம். உலகளாவிய இணையதள போக்குவரத்தில், 0.29 சதவீதம் பங்களிப்பு டிராப்பாக்ஸ் நிறுவனத்தையுடையது. இந்நிறுவனத்தின் மதிப்பு 1,000 கோடியாகும்.

ஸ்பேஸ்-எக்ஸ்

ஸ்பேஸ்-எக்ஸ்

விண்வெளி போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கத்துடனே ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. திரும்ப பயன்படுத்தக்கூடிய ஏவுதல் வாகனங்களை உருவாக்குவதன் மூலம், விண்வெளி போக்குவரத்து செலவுகளை குறைப்பதே இதன் லட்சியமாகும். இது வரை திரும்ப பயன்படுத்தக்கூடிய ஏவுதல் வாகனங்கள் இரண்டை அவர்கள் வடிவமைத்துள்ளனர் - ஃபால்கான்1 மற்றும் ஃபால்கான்9. 2013ஆம் ஆண்டில் புவியிணக்கப்பாதைக்கு செயற்கைக் கோளை அனுப்பிய முதல் தனியார் நிறுவனமாக இது விளங்குகிறது. நாசாவிடம் இருந்து பல ஒப்பந்தங்களை இது பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு 480 கோடியாகும்.

யூபெர் (Uber)

யூபெர் (Uber)

யூபெர் நிறுவனம் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. 2010ஆம் ஆண்டில் மொபைல் அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஶஸ் மூலமாக கார்களை வாடகைக்கு எடுக்கலாம். அவர்களின் அப்ளிகேஷனை பயன்படுத்தி, வாடகைக்கு எடுத்த கார் எந்த இடத்தில் உள்ளது என்பதையும் கண்டறியலாம். அமெரிக்காவை தவிர பல நாடுகளில் யூபெர் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மதிப்பு 380 கோடியாகும்.

ஏர்பிஎன்பி (Airbnb)

ஏர்பிஎன்பி (Airbnb)

வாடகையாளர்களும், உரிமையாளர்களும் இணையதளம் மூலம் இணைந்து வணிகம் செய்திட, ஏர்பிஎன்பி நிறுவனம் வழி வகிக்கிறது. உரிமையாளர்கள் ஏர்பிஎன்பி-யில் பதிவு செய்து, வாடகைக்கு விடப்போகும் சொத்துக்கள் பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும். ஏர்பிஎன்பி-யில் தனியார் அறைகள் முதல் படகுகள் வரையிலான சொத்துக்களை வாடகைக்கு விட பதிந்து கொள்ளலாம். 2013-ல் 192 நாடுகளில் 5,00,000 பட்டியலிடலை கொண்டது ஏர்பிஎன்பி.

ஸ்ட்ரைப் (Stripe)

ஸ்ட்ரைப் (Stripe)

இணையதள வணிக நடவடிக்கைகள் சீராக நடைபெறும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதே ஸ்ட்ரைப் நிறுவனம். ஒவ்வொரு வெற்றிகரமான வணிக நடவடிக்கைகளுக்கு ஸ்ட்ரைப் நிறுவனம் 2.9 சதவீதம் கட்டணமாக வசூலிக்கிறது. அவர்களின் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக வாடிக்கையாளர்கள் தொகையை செலுத்தலாம்.

ப்யூர் ஸ்டோரேஜ்

ப்யூர் ஸ்டோரேஜ்

ப்யூர் ஸ்டோரேஜ் நிறுவனம் தரவு சேமிப்பு வணிகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எண்டெர்ப்ரைஸ் ஸ்டோரேஜ், டெஸ்க்டாப் விர்ச்சுவலைசேஷன், தரவு சேமிப்பு மற்றும் க்ளவுட் கம்ப்யூடிங் போன்றவைகளில் சிறப்புடன் செயல்படுகிறது இந்நிறுவனம். டெக்னாலஜி இன்னோவேஷன் அவார்ட் 2012ஆம் ஆண்டில் ப்யூர் ஸ்டோரேஜ் வெள்ளிப்பதக்கத்தை வென்றது என்று வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு 100 கோடியாகும்.

மோசமான சம்பளம்

மோசமான சம்பளம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+