தரம் உயர்ந்த ஏர்டெல் நிறுவனம்!! பங்கு சந்தையில் 5.5% உயர்வு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக நிறுவனங்களின் வர்த்தக மதிப்பீட்டு ஆலோசனை அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனம் (எஸ் அண்ட் பி) அளித்துள்ள மதிப்பீட்டு உயர்வினையடுத்து பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் மதிப்பு 5.5 சதவிகிதம் உயர்ந்தது. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனத்தின் மதிப்பீடு உலகளவில் மிகவும் நம்பகமான நிறுவனம்.

 

ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தை பற்றிய அறிக்கையை வெளியிட்ட சில மணிநேரங்களில் அந்நிறுவனப் பங்குகள் ஒரு சாதகமான துவக்கத்துடன் 5.35 சதவிகிதம் உயர்ந்து மும்பை பங்குச்சந்தையில் 301.10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தரம் உயர்ந்த ஏர்டெல் நிறுவனம்!! பங்கு சந்தையில் 5.5% உயர்வு..

தேசிய பங்குச் சந்தையில், அது 5.47 சதவிகிதம் உயர்ந்து 301.45 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒப்பீட்டு அளவு சென்செக்ஸ் மதிப்பீடு 1.6 சதவிகிதம் ஊக்கம் பெற்று நாளின் உயர்ந்த அளவாக 21866.51 என்ற அளவை எட்டியது.

வியாழனன்று எஸ் அண்ட் பி, ஏர்டெல் நிறுவனத்தின் மதிப்பீட்டை அந்த நிறுவனத்தின் குறைந்து வரும் கடன்கள் மற்றும் நிர்வாக சூழ்நிலை மாற்றங்களின் அடிப்படையில் "பிபிபி" என்று மறுமதிப்பீடு செய்தது.

"ஏர்டெல்லின் நெடுநாளைய நிறுவனக் கடன் மதிப்பீடு பிபி+ என்ற மதிப்பீட்டிலிருந்து பிபிபி என்ற மதிப்பீட்டிற்கு உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அந்நிறுவன சூழல் ஸ்திரமாக உள்ளது" என எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel shares gain 5.5% after S&P upgrades rating

Bharti Airtel shares on Friday surged as much as 5.5 per cent after Standard and Poor's upgraded the telecom major's ratings.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X