இணையவழி மோசடிகளுக்கு காப்பீடு கோரும் நிலையில் வங்கிகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அதிகரித்து வரும் கிரெடிட் கார்டு, இணைய வழி பரிமாற்ற மோசடிகளுக்கு எதிராக இந்திய வங்கிகள் காப்புறுதியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கிரேடிட் கார்டின் பயன்பாடு மற்றும் இணைய வழி வர்த்தகம் அதிகரித்து வருவதால் கடன் வழங்குபவர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருகிறது. இந்த அடையாள திருட்டின் மூலம் இந்தியாவில் மட்டும் பல ஆயிரம் கோடி அளவில் வங்கிகள் நஷ்டம் அடைந்துள்ளது.

 

பெரிய வங்கிகள் மற்றும் பன்னாட்டு வங்கிகள் பலவும் ரூ.500 கோடிகள் வரையிலும் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான காப்பீடுகளை பெற்றுள்ளன, இதில் இணைய வழி மோசடிகளும் அடக்கம். மத்திய தர வங்கிகளில் இந்த அளவு ரூ.250 முதல் 300 கோடிகள் வரையிலும் இருக்கும்.

'பிஷ்ஷிங், ஸ்கிம்மிங் மற்றும் இண்டர்நெட் ஹாக்கிங் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான காப்பீடுகள் மிகவும் அதிகரித்துள்ளன' என்று பஜாஜ் அல்லையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.ஆர்.இராமலிங்கம் குறிப்பிடுகிறார். 'இதற்கான விசாரணைகள் துவங்கிவிட்டது, மேலும் நாங்கள் இவற்றிற்கு எவ்வகையில் விலை நிர்ணயம் செய்வது என்றும், கட்டுப்பாடுகள் பற்றியும் விவாதித்து வருகிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆன்லைன் மோசடிகள்

ஆன்லைன் மோசடிகள்

முன்னதாக, கணிணி வழியாக நடக்கும் மோசடிகள் இன்சூரன்ஸ் காப்பீடுகளின் கீழ் இல்லை, ஆனால் இந்த விஷயத்தை வரும் காலத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது. இதற்கான பிரிமியம் சில காரணிகளை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

ரூ.17,284 கோடி இழப்பு

ரூ.17,284 கோடி இழப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவலின் படி 2012-12-ம் ஆண்டில் மட்டும் உள்ளூர் வங்கிகளில் நடந்த மோசடிகள் ரூ.17,284 ஆக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 62 வங்கிகள் 26,598 வழக்குகளை இணைய வழி மோசடிகளின் பேரில் பதிவு செய்துள்ளளன.

வங்கிகளுக்கு மேலும் ஒரு தலைவலி
 

வங்கிகளுக்கு மேலும் ஒரு தலைவலி

கடன் வழங்குபவர்கள் பெருமளவு செயல்பாட்டில் இல்லாத சொத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலையுடன் இந்த பிரச்னையும் கை கோர்த்துக் கொள்வதால் வங்கிகள் கவலையில் இருக்கின்றன.

டாடா ஏஐஜி

டாடா ஏஐஜி

'இந்த பாலிசி இணைய வழி அச்சுறுத்தல்களையும் மற்றும் தகவல் திருட்டுகளையும் காப்பீடு செய்வதாக இருக்கும்' என்று டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.ரவிச்சந்திரன் தெரிவிக்கிறர். 'சைபர் இன்சூரன்ஸ் பற்றிய பேச்சுக்களும் மற்றும் பாதுகாப்பான அனுபவம் பற்றிய எதிர்பார்ப்புகளும் நிறைய உள்ளன' என்பது இவரின் கருத்தாகும்.

பாதுகாப்பு திட்டம்

பாதுகாப்பு திட்டம்

டாடா ஏஐஜி போன்ற நிறுவனங்களில் இந்த பாலிசிகளுக்கு அன்டர் ரைட்டிங் திறன்களும், பிற நிறுவனங்களில் மீண்டும் இன்சூரன்ஸ் செய்ய வழிகாட்டும் வகையிலான திறன்களும் கொண்டுள்ளன.

சைபர் எக்ஸ்டோர்ஷன் பாலிசி

சைபர் எக்ஸ்டோர்ஷன் பாலிசி

வங்கியின் இணையதளத்தை அச்சுறுத்தி இரகசியமான தகவல்களை அழித்தல் அல்லது திருடும் நோக்கிலோ யாராவது ஹாக்கிங் செய்தால் அவருக்கு சைபர் எக்ஸ்டோர்ஷன் பாலிசி திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குகிறது. கடந்த ஆண்டில், பிரபலமான தனியார் வங்கியின் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ஸ்கிம்மிங் முறையில் ரூ15.48 லட்சங்கள் வரையில் திருட்டுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rising online fraud pushes banks to seek insurance cover

Indian banks are increasingly seeking insurance cover against fraudulent online transactions, including those involving credit cards, as a rising use of plastic money and the ease of Internet business potentially increase lenders' exposure to cases of data breach.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X