டெல்லி: பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்து 25.68 பில்லியன் டாலர் வரை சரிந்தது. அதேபோல் இறக்குமதியும் சரிவை கண்டது. இறக்குமதி சுமார் 17.09 சதவீதம் சரிந்து 33.81 பில்லியின் டாலரை எட்டியது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 8.13 பில்லியன் டாலராக உள்ளது.
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் தகவலின் படி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் ஏற்றுமதி 4.79 சதவீதம் அதிகரித்து 282.7 பில்லியன் டாலர் வரை எட்டியது என செவ்வாய் கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அதே காலகட்டத்தில் இறக்குமதி 8.56 சதவீதம் சரிந்தது குறிப்பிடதக்கது. இறக்குமதி சரிந்ததால் அதன் மதிப்பு 410.86 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் ஏப்ரல்- பிப்ரவரி மாதங்களின் 11 மாத இடைவேளியில் வர்த்தக பற்றாக்குறை 128 பில்லியன் டாலராக உள்ளது.
இந்த வர்த்தக பற்றக்குறை நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த வண்ணமே உள்ளது.


Click it and Unblock the Notifications