காப்பீட்டு துறையின் பிரீமியம் வசூல் 19% அதிகரிப்பு!! சிறப்பாக செயல்படும் அப்பல்லோ மூனிச்..

டெல்லி: நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் சுமார் 19 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த அதிபட்ச உயர்வினால் காப்பீட்டு நிறுவனங்கள் சுமார் 7,381 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக காப்பீட்டு துறை தெரிவித்துள்ளது.

மேலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் முக்கியமான நான்கு நிறுவனங்களின் அதாவது நேஷ்னல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த பிரிமாயத்தின் வசூல் மட்டும் 24.62 சதவீதம் அதிகரித்து சுமார் 4,106 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் வசூல்

பிரீமியம் வசூல்

இந்தியாவில் காப்பீட்டு துறையில் சுமார் 23 நிறுவனங்கள் தனிச்சையாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. ஜனவரி மாத பிரீமியம் வசூலில் 56 சதவீத பங்கு பொதுதுறை காப்பீட்டு நிறுவனகங்களை சார்ந்தது.

அப்பல்லோ மூனிச்

அப்பல்லோ மூனிச்

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் அப்பல்லோ மூனிச் நிறுவனத்தின் பிரீமியம் வசூல் 56 சதவீதம் உயர்ந்தது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் வரி வசூல் 166 கோடிக்கும் அதிகமாக இருந்தது.

ஐசிஐசிஐ, எஸ்பிஐ

ஐசிஐசிஐ, எஸ்பிஐ

அதேபோல் ஐசிஐசிஐ லாம்பார்டு நிறுவனம் 6.6 சதவீதம் வளர்ச்சியுடனும், ரிலையன்ஸ் ஜெனரல் நிறுவனம் 14.1 சதவீத உயர்வும், ஹெச்டிஎஃப்சி ஏர்கோ ஜெனரல் நிறுவனம் 9.5 சதவீத வளர்ச்சியுடனும், எஸ்பிஐ ஜெனரல் நிறுவனம் 38.85 சதவீத வளர்ச்சியுடன் இருக்கிறது.

ஐஆர்டிஏ

ஐஆர்டிஏ

இன்சூரன்ஸ் துறையின் ரெகுலேடரான ஐஆர்டிஏ-வின் தகவல் படி, கடந்த ஏப்ரல்- ஜனவரி மாத இடைப்பட்ட காலகட்டங்களில் பொது துறை காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த வளர்ச்சி 11.77 சதவீதம் உயர்ந்து ரூ.35,674.79 கோடி வசூலாகி உள்ளது.

தனியார் நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்கள்

அதேபோல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில் 16.17 சதவீத வளர்ச்சியுடன் சுமார் 28,091.97 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+