உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த 3 பில்லியன் டாலர் நிதியுதவி!! உலக வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுவதால், உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையை களைய உக்ரைன் உலக வங்கியிடம் நிதியுதவிக்காக நாடியது. இந்நிலையில் உலக வங்கி உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுமார் 3 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்தது.

 

திங்கட்கிழமை காலை உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் "உக்ரோன் நாட்டின் இடைக்கால அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க எங்களிடம் (உலக வங்கி) அனுகியது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பொருளாதாரத்தை சிர்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் நிதியுதவி அளிப்பதாக உறுதி கூறினோம்" என செய்தி வெளியிட்டதாக சின்குவா தெரிவித்தது.

தலையாய கடமை

தலையாய கடமை

நிதியுதவி குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் கூறிகையில் "உக்ரைன் நாட்டு உள்ள நிலைமையில் நிதியுதவி செய்வது எங்களது தலையாய கடமையாகும். உக்ரைன் நாட்டின் இந்த பொருளாதார நிலை மற்றும் நாட்டில் நிலவும் போர் பதற்றமும் கூடிய விரைவில் சீரடையும்" என அவர் தெரிவித்தார்.

சிர்திருத்த திட்டங்கள்

சிர்திருத்த திட்டங்கள்

உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இப்பிரச்சனைகளை உடனடியாக களைய சிறிய சிர்திருத்த திட்டங்களும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நீண்ட கால சிர்திருத்த திட்டங்களும் தேவை என வாஷிங்டனை தளமாக கொண்ட ஒரு நிதி நிறுவனம் கூறியது.

முக்கிய துறைகள்
 

முக்கிய துறைகள்

மேலும் உலக வங்கி உக்ரைன் நாட்டிற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது, அதில் "பொருளாதார நிலைத்தன்மை, வங்கித்துறை வலுப்படுத்துதல், ஆற்றல் துறை சீர்திருத்தம், ஊழலை ஒழித்தல் மற்றும் பொறுப்புடைமை மேம்படுத்துதல், முதலீடுகளை காலநிலை பொருத்து மேம்படுத்துதல்" அகியவற்றை முக்கிய இலக்காக கொண்டு செயல்பட அறிவுறுத்தியுள்ளது

35 பில்லியன் டாலர் தேவை

35 பில்லியன் டாலர் தேவை

இந்த நிதியுதவி பற்றி உக்ரைன் நாட்டின் நிதியமைச்சகம் கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுமார் 35 பில்லியன் டாலர் தேவை என தெரிவித்தது. இந்த நிதியுதவி சில துறைகளில் முக்கிய தேவையை பூர்த்தி செய்ய உதவும் என் உக்ரைன் நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Bank to give $3 billion to Ukraine

The World Bank has said it would provide up to $3 billion in aid for Ukraine in 2014 to help the country deliver much-needed economic reforms.
Story first published: Tuesday, March 11, 2014, 14:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X