பங்கு சந்தையில் 6% உயர்வை கண்ட ஜஸ்ட் டயல் பங்குகள்!!
சென்னை: இணையதள நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனம் பங்கு சந்தையில் குதித்து முழுமையாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆனாலும் பங்கு சந்தையில் இதன் செயல்படு மிகவும் அபாரம். 2013ஆம் ஆண்டு மே 20 அன்று சுமாப் 450-543 ரூபாய் அளவில் பங்கு சந்தையில் விற்பனைக்காக பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது ஒரு பங்கின் விலை 1615.80 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.

இன்று இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் சுமார் 6 சதவீதம் உயர்ந்து. மேலும் இந்நிறுவனத்தை நிப்டியின் எஃப் அண்டு ஒ (F&O) பிரிவில் வரும் வியாழன் முதல் சேர்க்க உள்ளனர்
அதேபோல் இன்று நிப்டியிலும் சுமார் 5.50 சதவீத உயர்வை கண்டது.
மேலும் இன்று மும்பை பங்கு சந்தை சரிவை தழுவாமல் தப்பித்தது இதனால் சந்தையில் 29.80 புள்ளிகள் உயர்ந்து 21856.22 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications