ஹைதராபாத்: இந்தியாவில் உள்நாட்டு பிராந்திய மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வான்வழி இணைப்பின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் இத்துறையை விரிவாக்கம் செய்ய விமான போக்குவரத்து துறை எண்ணியுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இத்துறையை மேம்படுத்துவதற்காக சுமார் 74,000 கோடி ரூபாய் வரை செலவிடப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில், சுமார் 56,700 கோடி ரூபாய் வரையிலான தொகை தனியார் துறையின் பங்களிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"விமான போக்குவரத்தின் அடர்த்தியைப் பொறுத்தவரையில், சீனாவின் 282, பிரேஸிலின் 231, மலேஷியாவின் 1,225 மற்றும் அமெரிக்காவின் 2,896 ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் 72 என்பது மிகவும் குறைவான அளவே. அதிகம் கண்டு கொள்ளப்படாத இந்த சந்தையை மேம்படுத்தினால் நற்பயன்களை அள்ளிக்கொடுக்கவல்ல அதன் ஆற்றலையே இது காட்டுகிறது," என்று சிவில் ஏவியேஷன் அமைச்சரான அஜித் சிங் கூறியுள்ளார்.
சலுகைகள்
இந்திய ஏவியேஷன் காட்சியின் நான்காவது பதிப்பை கடந்த புதன்கிழமையன்று துவக்கி வைத்துப் பேசிய அவர், ரீஜனல் அண்ட் ரிமோட் ஏரியா ஏர் கனெக்டிவிட்டி பாலிஸியில் விமானங்களை இயக்கக்கூடிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பல்வேறு நிதி சார்ந்த மற்றும் இதர சலுகைகளை வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைவு விலை விமான நிலையம்
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா குறைவு விலை விமான சேவைகளுக்கு ஏற்றவாறு சுமார் 50 குறைவு விலை விமான நிலையங்களை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. கைதேர்ந்த பணியாளர்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் சிவில் ஏவியேஷன் பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.
வரி குறைப்பு
தி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி (எஃப்ஐஸிஸி) மற்றும் ஏவியேஷன் துறை ஆகியவை, கடினமான வரி விதிப்பினால் இத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளன. இத்துறை வளர்ச்சியடைய வேண்டுமெனில், வரிக்குறைப்பு மிகவும் அவசியம் என்பதையும் இந்த சேம்பர் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏரிபொருள்
எஃப்ஐஸிஸியின் தலைவராகிய சித்தார்த் பிர்லா, சுமார் 4 முதல் 30 சதவீதம் வரை விதிக்கப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் மீதான வரியை சுட்டிக்காட்டி, "இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 60 சதவீதம் வரையிலான அதிகமான விலைக்கு இதுவே காரணமாகும்" என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications