டெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளரை கொண்டு செயல்படும் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் நிதி திரட்டுவதற்காக சுவிஸ்ர்லாந்து சந்தையில் நிறுவன பத்திரங்களை விற்பனை செய்யதது. இந்த பத்திர விற்பனையில் சுமார் 350 மில்லயன் சுவிச்சர்லாந்து ஃப்ரான்குகளை பெற்றது, இந்நிய ரூபாய் மதிப்பில் இது 2,453.20 கோடி ரூபாய் மதிப்புடையது.
இன்றைய பண பரிமாற்றச் சந்தையில் ஒரு சுவிச்சர்லாந்து ஃப்ரான்கிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 70.24 ரூபாயாகும்.
இந்த முதலீட்டு பத்திரங்கள் ஏர்டெல் நிறுவனம், நெதர்லாந்து நாட்டில் முழுவது கைப்பற்றிய பார்தி ஏர்டெல் இன்டர்நேஷ்னல் பிவி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.
நிதி திரட்டிய ஏர்டெல்
இந்த நிதியாண்டில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் முன்று முறை வெளிநாடுகளில் நிதி திரட்ட பத்திரங்களை விற்பனை செய்துள்ளது. இதில் திரட்டபட்ட நிதி தற்போது இருக்கும் கடன்களை குறைக்க உடவும் என இந்நிறுவனம் தெரிவித்தது.
3 சதவீத வட்டி
இந்த பத்திரங்கள் 3 சதவீத வட்டி விகிதத்துடன் சுமார் 6 வருட முதிர்வு காலம் கொண்டது. முதலீட்டாளர்களுக்கும் சுமார் 2.98 சதவீத லாபத்தை அளித்தரும் என இந்நிறுவனம் தெரிவித்தது.
22 நாடுகளில் ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் உலகின் இந்தியாவை சேர்த்து சுமார் 22 நாடுகளுக்கும் மேல் பல பகுதிகளில் தனது செயல்பாட்டையும், சேவையையும் வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பல சிக்கல்களுக்கும் மத்தியில் சிறப்பாக செயல்பட்டு எந்தொரு பிரச்சனையும் இல்லாமல் தனது சேவை வழங்கி வருகிறது.
பங்குகள்
பங்கு சந்தையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 295.10 ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications