சென்னை: இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட பங்கு சந்தை நேற்று சற்று மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டது. நேற்றைய மும்பை பங்கு சந்தை வர்த்தகத்தில் 82 புள்ளிகள் சரிந்தன். நேற்றை வர்த்தக்கத்தின் முடிவில் தொழில்துறை உற்பத்தி, சில்லறை விலை பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் 25 மாதங்களில் இல்லாத அளவிற்கு பிப்ரவரியில் சில்லறை விலை பணவீக்கம் 8.10 சதவீதமாக குறைந்துள்ளது.
நேற்று பங்குசந்தை தொடங்கிய சில மணிநேரங்களில் மும்பை பங்கு சந்தையில் முக்கியமான நிறுவனங்களின் பங்குகள் அதிகவிலைக்கு விற்கப்பட்டது, இதனால் சந்தையில் 135 புள்ளிகள் உயர்ந்தன.
ஐடி துறை பங்குகள் சரிவு
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத் தூண் என கூறப்படும் ஐடி துறையின் பங்குகள் நேற்று பெருவாரியாக அனைத்து நிறுவனங்களும் சரிந்தன். முக்கியமாக நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 8 சதவீதம் சரிந்தது.
நாராயனமுர்த்தி
இந்த பங்கு விலை குறைப்பை கண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயனமுர்த்தி கூறுகையில், " இந்த விலை குறைப்பு எங்கள் நிறுவனத்தின் நான்காம் காலாண்டின் குறைவான வளர்ச்சியே காரணம்" என அவர் தெரிவித்தார். மேலும் இந்நிலை கூடய விரைவில் மாற்றம் ஏற்ப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மற்ற நிறுவனங்கள்
மேலும் ரியல் எஸ்டேட், மருந்து, மின்சாரம், உலோகம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
லாபம் அடைந்த நிறுவனங்கள்
இந்நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி, மகிந்திரா - மகிந்திரா உள்ளிட்ட 17 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.
நேற்றைய வர்த்தகம்
வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்' 81.61 புள்ளிகள் சரிவடைந்து 21,774.61 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி' 23.80 புள்ளிகள் சரிந்து 6,493.10 புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகம்
இன்றைய வர்த்தகம் இன்னும் மோசமான நிலையில் உள்ளது சென்செக்ஸ் 161.48 புள்ளிகள் குறைந்து 21613.13 புள்ளிகளை அடைந்துள்ளது. நிப்டியில் 49.40 புள்ளிகள் குறைந்து 6443.70 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications