ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2% பங்குகளை விற்றது எல்ஐசி
மும்பை: எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளை விற்றுள்ளது. இதனால் பங்கு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் சமார் 24.17 புள்ளிகள் அதரித்து 2,125.35 ரூபா.
இந்த பங்கு விற்பனையில் சுமார் 40,74,307 பங்குகளை எல்ஐசி விற்றுள்ளது என இந்நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தது.
இதனால் எல்ஐசி நிறுவனத்திடம் 5.03 சதவீதமாக இருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் இப்போது 2.99 சதவீதமாக குறைந்துள்ளது. பங்கு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் விலை உயர்ந்தாலும் சில நாட்களுக்கு பின் இப்பங்குகள் நிலையற்ற நிலையை அடையும்.
அதேபோல் எல்ஐசி நிறுவனம் 2013ஆம் வருடம் ஜனவரி 31 தேதி ஹீரோ மோட்டோகார்ப் பங்குகளை விற்றுது குறிப்பிடதக்கது.



Click it and Unblock the Notifications