அமெரிக்காவின் சிறந்த இளம் சீஇஒ பட்டியலில் 2 இந்தியர்கள்!! ஃபோர்ப்ஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூ யார்க்: அமெரிக்காவின் 40 வயதிற்குட்பட்ட செயல்திறன் மிக்க சிஈஓக்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இரு இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பது இதன் சிறப்பு. இதில் முதல் இடம் பிடித்திருப்பது கூகுள் நிறுவன சிஈஓவும், இணை நிறுவனருமான லேரி பேஜ் ஆவார்.

 

ஒவ்வொரு வருடமும் இது போன்ற பல தரப்பட்ட பட்டியல்களை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. இத்தகைய வெளியிடு வர்த்தக உலகில் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த பட்டியல்கள் அனைத்தும் தகுந்த முறையில் சோதனை செய்த பின்னரே வெளியிடப்படும். எனவே இப்பத்திரிக்கையின் மீது வர்த்தக வல்லுனர்கள், நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அளவுகடந்த நம்பிக்கை உள்ளது

ஹரி கே.ரவிச்சந்திரன்

ஹரி கே.ரவிச்சந்திரன்

இணையதள சேவை வழங்கும் நிறுவனமான என்ட்ரந்ஸ் இண்டெர்நேஷனல் குழுமத்தின் சிஈஓ-வும் நிறுவனருமான ஹரி கே.ரவிச்சந்திரன் (38) இப்பட்டியலில் 19-வது இடத்தை பெற்றுள்ளார். மேலும் ரவிச்சந்திரன் நிறுவனம் $ 2.1 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடையது. அவர் வார்ட்சன் பல்கலைகழக்கத்தில் எம்பிஏ பட்டமும், ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழக்கத்தில் எலெக்ட்ரிக்ள் எஞ்சினீரிங் கற்றார்.

ஆஷிஷ் பாண்டே

ஆஷிஷ் பாண்டே

சொத்து மேலாண்மை நிறுவனமான ஆல்டிசோர்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் (ஏஏஎம்சி) சிஇஓ ஆஷிஷ் பாண்டே(38) 20 வது இடத்திலும் உள்ளனர். ஆல்டி சோர்ஸ் நிறுவனம் $1.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பும் கொண்டது. டிசம்பர் 2012 ல் இருந்து ஏஏஎம்சி -ன் இயக்குனராகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பாண்டே பணியாற்றினார்.அவர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் -ல் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

இந்திய மூளைக்கு ஒரு அத்தாட்சி
 

இந்திய மூளைக்கு ஒரு அத்தாட்சி

இளைஞர்களின் இளமை வீணாகிறது என்று கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் தங்கள் ஆரம்ப காலங்களில் எத்தனையும் விரயம் செய்திடவில்லை. சிலர் தங்கள் பணியை ஓய்வு அறையிலேயே புதுமையான முறையில் தொடங்குகின்றனர், சிலர் ரேங்குகள் மூலம் தங்கள் சாதனைகளை பதிவு செய்கின்றனர்.

40 வயது

40 வயது

இவர்கள் அனைவரும் கடந்து வந்த பாதை எதுவாயினும் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருமே தங்கள் 41 - வது பிறந்த நாளுக்கு முன்னதாகவே இத்தகைய உயர்வை எட்டியுள்ளனர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதிக சந்தை முதலீட்டு நிறுவனங்கள்

அதிக சந்தை முதலீட்டு நிறுவனங்கள்

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 20 சிஈஓக்களும் அதிக சந்தை முதலீட்டு மதிப்பு கொண்ட போது நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் ஆவர்.

லேரி பேஜ் - கூகிள்

லேரி பேஜ் - கூகிள்

கடந்த வருடம் முன்னணி தேடுதல் இணையதள நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக லேரி பேஜ் - ன் தனிப்பட்ட சொத்து மதிப்பும் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்வடைந்தது.

மார்க் ஜுக்கர்பெர்க் - பேஸ்புக்

மார்க் ஜுக்கர்பெர்க் - பேஸ்புக்

பட்டியலில் இடம் பெற்றுள்ள மிக இளைமையான சிஈஓ ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், 29, ஆவார்.அவர் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

மரிசா மேயர்- யாஹூ

மரிசா மேயர்- யாஹூ

இரண்டாவது ஆண்டாக யாஹூ நிறுவன சிஈஓ மரிஷா மேயர், 38, மூன்றாவது இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்ணும் இவரே ஆவார். இது இப்பட்டியலின் மற்றொரு சிறப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Two Indians among America's most powerful CEOs under-40

Two Indian CEOs have been named among America’s most powerful CEOs under the age of 40 — who head publicly-traded companies with highest market values — in the Forbes magazine list that is topped by Google CEO and co-founder Larry Page.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X