பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை "எஸ்பிஐ-ஈபே"!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இணையதளத்தில் பணத்தை செலுத்த பயன்படும் கட்டணம் நுழைவாயில் என்னும் பேமண்டு கேட்வே சேவையை பாரத ஸ்டேட் வங்கி துவங்கியது. "எஸ்பிஐஈபே" (SBIePay) என்ற பெயரில் துவங்கிய இச்சேவை இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் பரிமாற்றத்தில் புதிய சக்தியாக திகழும். மேலும் இச்சேவை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், மற்றம் பலதரப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கண் சிமிட்டும் நொடியில் பணத்தை பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவித்தது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, முதன்முதலில் பேமண்டு கேட்வே சேவையை துவங்கியது. இதுவரை எந்த ஒரு வங்கியும் இத்திட்டதை அனுமதிக்கவில்லை. மேலும் இன்றைய நாள் முதல் இச்சேவையை தனியார் நிறுவனங்கள் மூலமே பெறப்பட்டு வந்தது.

இச்சேவையின் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களை கவர முடியும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

32 சதவீதம் உயர்வு

32 சதவீதம் உயர்வு

கடந்த இரு வருடங்களில் இந்தியாவில் மின்னணு பரிமாற்றம் சுமார் 32 சதவீதம் உயர்ந்துள்ளதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரிமாற்றத்தால் ரூ.15,400 கோடியாக இருந்த வர்த்ததம் இப்போது ரூ.47,349 கோடியாக அதிகரித்துள்ளது.

எஸ்பிஐ-ஈபே சேவையின் ஆதிக்கம்

எஸ்பிஐ-ஈபே சேவையின் ஆதிக்கம்

இந்த எஸ்பிஐஈபே சேவை இன்னும் சில நாட்களில் மின்னணு முறையில் பில்களை கட்டும் தளமான இபிபிபி சேவையும், மொபைல் போன் மூலம் கட்டணத்தை செலுத்தும் சேவையான ஐவிஆர்எஸ் போன்ற சேவைகளை விட பல் மடங்கு அதிகப்படியான ஆற்றல் மிகுந்த சேவையை வழங்கவுள்ளது

நுகர்வோர் சந்தை

நுகர்வோர் சந்தை

ஆன்லைன் பயண துறையை தொடர்ந்து இப்போது நுகர்வோர் சந்தையிலும் அதிகப்படியான ஆன்லைன் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. இதனால் இச்சேவை மக்களுக்கு உதவியாக இருக்கும்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

மும்பை பங்குசந்தையில் ஸ்டேட் வங்கியின் பங்குகள் 1653.50 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI launches SBIePay to facilitate electronic transactions

State Bank of India has launched a payment intermediary christened as 'SBIePay', which will facilitate e-commerce or m-commerce transactions.
Story first published: Saturday, March 15, 2014, 13:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X