டெல்லி: விமான பயணிகளுக்கு ஒர் நற்செய்தி. சென்ற வாரம் நிறுவனங்கள் 60 மற்றும் 90 நாட்களுக்குமுன் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு பெரும் தள்ளுபடிகளை அறிவித்தன. இதையடுத்து கடந்த புதனன்று ஏர் இந்தியாவும் தன் விழாக்கால சலுகை போன்று தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா ஏதும் உறுதிப்படுத்தாத நிலையில், ஏஜெண்டுகளும், இணைய முன்பதிவு தளங்கள் கூறுகையில் ஏர் இந்தியாவும் உள்நாட்டு தடங்களில் கட்டணப் போட்டிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

இதற்கு எடுத்துக்காட்டாக, ஏர் இந்தியா டெல்லி-மும்பை பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன் பதிவுடன் 3881 ரூபாய் என்ற குறைந்தை நிர்னயித்துள்ளது. இதுவே 30 நாட்களுக்கு முன் செய்தால் 4983 ரூபாய் ஆகும். ஜனவரி மாத மத்தியிலிருந்து அந்த நிறுவனம் அறிவித்துள்ள நான்காவது தள்ளுபடி இதுவாகும்.
காக்ஸ் அண்ட் கிங்க்ஸ் நிறுவனத்தின் இணைய முன்பதிவு தளமான ஈசிகோ1.காம்-இன் தலைமை செயல் அதிகாரி நீலு சிங் இதுகுறித்து கூறுகையில், "இது போன்ற தந்திரங்கள் சந்தையில் தங்கள் பங்கை தக்கவைத்துக்கொள்ள செய்யப்படுபவை. இது நிறுவனங்கள் மற்றும் பயணிகளுக்கு விடாப்பிடியான சமயம். பயணிகள் 30 சதவிகித சலுகையில் பயணம் செய்யும் அதே வேளையில், ஏர் இந்தியா இதுபோன்ற விலைகளில் 10 முதல் 15 சதவிகித இருக்கைகளை நிரப்ப முடியும்" என்றார். மேலும் கடந்த செவ்வாய் கிழமை முதல் தங்கள் இணைய தள முன்பதிவுகள் பெருமளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications