ஆயுத இறக்குமதியில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அகிம்சை முறையில் போர் செய்த இந்தியா இப்போது ஆயுத முனையில் போர் செய்ய துவங்கியது. அது சரியான வழியா அல்லது தவறான வழியா என்று கருத்து கூற முடியாது. இதற்கு பதில் ஒன்று தான் ஊரோடு ஒத்து வாழ் என்பதே.

 

எப்போதும் ஆசிய கண்டத்தில் அதிகளவில் ஆயுத இறக்குமதி செய்வது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான். ஆனால் இப்போது இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானை காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட சமிபத்திய அறிக்கையில் இத்தகவல்களை அறிவித்துள்ளது. இதில் 2004-08 மற்றும் 2009-13 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி சுமார் 111% அதிகரித்துள்ளது. சர்வதேச ஆயுத இறக்குமதியை ஒப்பிடும் போது அது 7% முதல் 14% அதிகரித்துள்ளது என்று இந்நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.

1,000 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள்

1,000 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள்

இந்தியாவிற்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் அமெரிக்கா 2ஆம் இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க இந்தியாவிற்கு சுமார் 1,000 கோடி டாலர் மதிப்புடை ஆயுதங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆயுத இறக்குமதியில் பல போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அடக்கம்

அமெரிக்கா- பாகிஸ்தான்

அமெரிக்கா- பாகிஸ்தான்

அமெரிக்காவின் ஆயுத விற்பனையானது அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு 27 சதவீதமாக இருந்துள்ளது.

சீனா - பாகிஸ்தான்

சீனா - பாகிஸ்தான்

சீன அரசு 54 சதவீதம் அளவிற்கு பாகிஸ்தானிற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதுடன், வங்காளதேசத்திற்கு 82 சதவீத ஆயுதங்களை வழங்கியுள்ளது.

டாப் 5
 

டாப் 5

கடந்த 5 ஆண்டுகளில் (2009-13) இந்தியாவிற்கு ஆயுதங்கள் வழங்கிய 5 நாடுகளின் வரிசையில் அமெரிக்கா 29 சதவீதமும், ரஷ்யா 27 சதவீதமும், ஜெர்மனி 7 சதவீதமும், சீனா 6 சதவீதமும் மற்றும் பிரான்ஸ் 5 சதவீதமும் இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's arms imports almost three times of China, Pak: SIPRI report

India's continuing abject failure to build a robust defence industrial base (DIB) has come to into focus once again, with an international thinktank holding its arms imports are now almost three times as high as those of the second and third largest arms importers, China and Pakistan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X