டெல்லி: மத்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் தனது சுத்திகரிப்பு திறனை 10 கோடி டன்னிற்கும் அதிகமாக உயர்ந்த பல கட்டங்களாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தின் முந்திரா பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் புதிய அதிநவின சுத்திகரிப்பு ஆலையை அமைக்க இந்தியன் ஆயில் கார்பரேஷன் திட்டமிட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்படும் சுத்திகரிப்பு ஆலையின் சுத்திகரிப்புத் திறன் 1.50 கோடி டன்களாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 7 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளது. இதன் மொத்த சுத்திகரிப்பு திறன் 5.42 கோடி டன்களாகும். மோலும் இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சுத்திகரிப்பு திறன் 1.15 கோடி டன்னாக உள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் சுமார் ரூ.56,200 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சரிபாதி பங்கினை அதாவது 27,159 கோடி ரூபாயை எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications