ஸ்பெயின் நாட்டு தொலைதொடர்பு நிறுவனத்தை கைப்பற்றியது வோடபோன்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: இங்கிலாந்து மொபைல் நிறுவனமான வோடாபோன் ஸ்பெயின் நாட்டின் கேபிள் மற்றும் இண்டர்நெட் வழங்குனரான ஒநோ நிறுவனத்தை 7.2 பில்லியன் யூரோவிற்கு (அதாவது 10 பில்லியன் டாலர்) முழுமையாக கையகப்படுத்த உள்ளது.

 

இந்த கையகபடுத்துதலுக்காக வோடபோன் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் வெரிசோன் நிறுவனத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. கூட்டணி முறிவால் சுமார் 130 பில்லியந் டாலர் நிதி பெற்றுள்ளது. இந்த நிதியை கொண்டு ஸ்பெயின் நாட்டில் தனது செயல்பாட்டை துவக்க வோடபோன் முடிவு செய்துள்ளது.

"இந்த வோடபோன் - ஒநோ கூட்டணி மூலம் ஸ்பெயின் நாட்டில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக திகழ முடியும், மேலும் வோடபோன் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்" என வோடபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விட்ரியோ கோலோ தெரிவித்தார்.

வாடிக்கையாளர் எண்ணிக்கை

வாடிக்கையாளர் எண்ணிக்கை

கடந்த சில காலமாக ஸ்பெயினில் தொலைதொடர்பு சேவை வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்து அதிகப்படியான வாடிக்கையாளரை கவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பணியாளர்களின் நிலை

பணியாளர்களின் நிலை

மேலும் ஒநோ நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் வோடபோன் நிறுவனத்துடன் பணியாற்ற விருப்பம் என விட்ரியோ கோலோ தெரிவித்தார்.

நிதி பரிமாற்றம்

நிதி பரிமாற்றம்

இந்த ஒப்பந்தத்திற்கான மதிப்பில் சுமார் 6 பில்லியன் பவுண்டுகளை நடப்பு நிதியாண்டின் முன்றாம் காலாண்டிற்குள் பரிமாற்றம் செய்வதாகவும், மிதமுள்ள தொகையை தொலைதொடர்பு ஆணையத்தின் ஒப்பந்தம் கிடைத்த பின்பு செலுத்துவதாக வோடபோன் நிறுவனம் ஒநோ நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

1.9 மில்லியன் வாடிக்கையாளர்
 

1.9 மில்லியன் வாடிக்கையாளர்

தற்போது ஒநோ நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் சுமார் 1.9 மில்லியன் வாடிக்கையாளரிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஸ்பெயின் வர்த்தகத்தில் வோடபோன் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone buys Spanish cable firm Ono for 7.2 bn euros

British mobile phone giant Vodafone has agreed to buy Spanish cable television and Internet provider Ono for 7.2 billion euros (USD 10 billion), it said today.
Story first published: Tuesday, March 18, 2014, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X