டெல்லி: இந்தியாவில் மின்னணு சாதனங்களின் விற்பனை கடந்த சில வருடங்களாக தொடந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் இந்தியாவில் 2ஆம் மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களில் அதிகளவில் மின்னணு சாதனங்களை விற்கும் சில்லறை விற்பனை கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆன்லைன் சில்லறை வணிகத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த ஆன்லைன் வணிகத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடன் கடைநிலையிலும் கூட தொடர்புகொள்ள விரும்புகிறது இந்தியா அஞ்சல் நிறுவனம்.
இந்திய தபால் துறை ஆன்லைன் வர்த்தக்திற்கு ஏற்ப தன்னுடைய பார்சல் அனுப்பும் செயல்பாடுகளை சீரமைக்க/மறுபுனரமைப்பு செய்யவும், அதன் இயக்கம் மற்றும் கொண்டு செல்லும் வழிமுறைகளைகளும், பார்சல்கள் அல்லது பொட்டலங்களை டெலிவரி செய்தல் ஆகியவற்றில் மாற்றம் செய்து ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு டெலிவரி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
அஞ்சலகம்
இந்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் வரும் இந்த துறையில், இந்தியா முழுவதும் சுமார் 1,39,086 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களை அவர்களுடைய இடத்திலேயே சந்தித்து, பார்சல்களை இறுதியாக சேர்ப்பிக்கும் டெலிவரி இணைப்பாக இந்த அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.
ஆய்வில் இறங்கும் இந்தியா போஸ்ட்
இத்திட்ட ஆவணத்தை, இப்போது இருக்கும் நெட்வொர்க் பயன்பாடுகள் மற்றும் தொடர்புகள் கொண்டு, புதிய வியாபார வாய்ப்புகளுடனும் (இ-காமர்ஸ்) மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களுடன் சந்தையில் எப்படி திறமையுடன் பயன்படுத்துவது என்றும் ஒரு ஆலோசகரின் உதவியுடன் தபால் துறை ஆய்வு செய்ய உள்ளது.
புதிய உயரம்
மின்-வணிகத்தினால் வழி நடத்தப்படும் போக்குவரத்து மற்றும் பார்சல் டெலிவரி ஆகியவற்றைக் கொண்டு கூரியர், எக்ஸ்பிரஸ் பார்சல் மற்றும் பார்சல் சந்தைகளில் உலகளவிலும் மற்றும் இந்திய அளவிலும் புதியதொரு வளர்ச்சி இந்திய தபால் துறை எட்டும்.
புள்ளிவிபரம்
தகவல் புத்தகத்திலிருந்து (Book of Information) கிடைத்த தகவலின் படி, இந்தியா போஸ்ட்-ன் விரைவு தபால் சேவை மற்றும் எக்ஸ்பிரஸ் பார்சல் சேவை ஆகியவை உட்பட்ட, பார்சல் பொருட்களின் ஓட்டம், 2011-12-ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த 28 கோடிகளில் இருந்து 43 சதவீதம் உயர்ந்து 40 கோடிகளாக அதிகரித்திருந்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications