மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் தீடிரென சரிவை சந்தித்தது. இதற்கு காரணம் இந்நிறுவனத்தின் காலண்டு வருவாய் வெளியீடு தான்.
டாடா குழுமத்தின் மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது.
காலாண்டு வருவாய்
நடப்பு நிதியாண்டின் 4ஆம் காலாண்டு முடிவுகள் பற்றிய தகவல் வெளிவந்தது. 3ஆம் காலாண்டு வருவாயைவிட 4ஆம் காலாண்டின் வருவாய் மிகவும் குறைவாக இருக்கும் என்ற செய்தியை வர்த்தக வல்லுனர்கள் தெரிவித்தனர். இச்செய்தி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதர்ச்சியை கொடுத்தது.
கோடக் பங்கியல் நிறுவனம்
இதுகுறித்து கோடக் பங்கியல் நிறுவனம் கூறுகையில் "இந்த செய்தி டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு நிலையை கண்டிப்பாக பாதிக்கும். நடப்பு நிதியாண்டு துவங்கம் முதல் இந்நிறுவனம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது, இந்நிலையில் வருடத்தின் கடைசி காலாண்டு மோசமாக அமைந்தது."
கணிப்பு
மேலும் கோடக் நிறுவனம் தெரிவிக்கையில் மும்பை பங்கு சந்தையில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சரிவை எட்டும் என கோடக் நிறுவனம் கணித்துள்ளது.
பங்கு சந்தை
இன்று காலை வர்த்தக துவக்கத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 9.35 மணியளவில் 3.8 சதவீதம் குறைந்து ரூ.2039.56 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் 12.30 மணியளவில் 96.05 புள்ளிகள் குறைந்து அதாவது நேற்றை வர்த்தகத்தில் 4.53 சதவீதம் குறைந்து 2026.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications