சென்னை: நடப்பு நிதியாண்டின் மார்ச் மாத துவக்கம் முதல் ஐடி நிறுவன பங்குகள் கடும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இதனால் முதலீட்டாளர் பெரும் முதலீட்டை ஐடி துறையில் இருந்து எடுத்துக் கொண்டனர். இந்நிலை இன்று காலை முற்றிலுமாக மாறியது.
இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே ஐடி துறை பங்குகள் சிறப்பாக செயல்பட்டது. அதனால் இன்று அதிகம் லாபம் அடைந்த நிறுவனங்களில் ஐடி துறை முக்கிய இடம் வகுக்கிறது.
விப்ரோ
இன்று காலை 11.20 மணியளவில் விப்ரோ நிறுவன பங்குகள் 2.49 சதவீதம் உயர்ந்து மும்பை பங்கு சந்தையில் 558.55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வர்த்தக முடிவில் 545 ரூபாய்க்கு முடிந்தது குறிப்பிடதக்கது.
டிசிஎஸ்
நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முதன்மையாக திகழும் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.26 சதவீதம் உயர்ந்து 2,087 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று இதன் விலை 2,040.95 ரூபாய் என்பது குறிப்பிடதக்கது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவன பல பிரச்சனைகளுக்கு நடுவில், இந்நிறுவன பங்குகள் இன்று 1.27 சதவீதம் உயர்ந்து 3,313.25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள்
ஐடி துறை மட்டும் அல்லாது நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களான ஹந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் 1.81 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 571.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சன் பார்மா
மருத்துவ துறையில் சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் 1.45 சதவீதம் உயர்ந்து 593.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications