கடனை திருப்பி செலுத்தாத 6 நிறுவனங்களின் மீது சிபிஐ வழக்கு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் வரக்கடன் அதிகரித்ததால் வங்கிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டு இருக்கிறது. மேலும் இது நாட்டின் பொருளாதார நிலையை சீரளிக்கும் வகையில் உள்ளது. இதை உணர்ந்த மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

 

மத்திய அமைச்சகத்தின் புகாரின் பெயரில், மத்திய புலனாய்வு பரிவு (CBI) முதற்கட்டமாக சுமார் 6 நிறுவனங்களின் மீது கடன் செலுத்தாத குற்றத்திற்கு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அந்த 6 நிறுவனங்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. அவை டெக்கான் குரோனிக்கல் ஹோல்டிங்ஸ் (DCHL), ஜூம் டெவலப்பர்ஸ், பிக்சான் மீடியா, செஞ்சுரி கம்யூனிகேஷன்ஸ், ரஜத் பார்மாகெம் மற்றும் எஸ்டிசிஎல் (STCL) ஆகியவை ஆகும்.

கடனை திருப்பி செலுத்தாத 6 நிறுவனங்களின் மீது சிபிஐ வழக்கு!!

மேலும் சிபிஐ, நிறுவனங்கள் அல்லாது பொது துறை வங்கிகளில் கடன் பெற்றதை திரும்ப செலுத்தாமல் இருக்கும் சில தனி மனிதர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் பல பெரும் புள்ளிகளின் பெயர் அடங்கும் என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியன் மூலம் பல நிறுவனங்களும், பெரும் புள்ளிகளும் தங்களது கடன் தொகையை செலுத்த முற்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அறிக்கையை டெக்கான் குரோனிக்கல் ஹோல்டிங்ஸ் (DCHL), ஜூம் டெவலப்பர்ஸ், பிக்சான் மீடியா, செஞ்சுரி கம்யூனிகேஷன்ஸ், எஸ்டிசிஎல் (STCL) நிறுவனங்களுக்கு அனுப்பப்ட்டது. மேலும் எந்தொரு நிறுவனத்தில் இருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை என சிபிஐ தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBI books 6 companies for loan defaults

The Central Bureau of Investigation (CBI) has registered 10 FIRs against six companies for allegedly defaulting on loans from state-run banks.
Story first published: Friday, March 21, 2014, 11:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X