சென்னை: நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பதில் தான் உள்ளது நமது திறமை. சரியான முறையில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். பாதுகாப்பான முதலீடு என்றால் அது வங்கி வைப்பு நிதியாகவும் இருக்கலாம்.
பல இந்தியார்கள் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர், இவர்களை ஈர்க்கும் வகையில் என்.ஆர்.ஐ களுக்கான வைப்பு நிதிகளுக்கு அதிகப்படியான வட்டி விகிதத்துடன் இந்திய வங்கிகள் நிதிச் சேவை அளித்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் பொது துறை வங்கிகளை விட தனியார் வங்கிகள் நமது வைப்பு நிதிகளுக்கு அதிகப்படியான வட்டியை அளிக்கிறது. இப்படிபட்ட சில வங்கி என்.ஆர்.ஐ வைப்பு நிதியை பற்றி காண்போம்
லக்ஷ்மி விலாஸ் வங்கி
ஐந்து ஆண்டு முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு சுமார் 9.75 சதவீத வட்டியுடனும், 2 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 9 சதவீத வட்டி அளிக்கிறது. இவ்வங்கி பிற தனியார் வங்கிகளை போன்று சக்தி வாய்ந்தது இல்லை. எனவே ஒரு முறைக்கு இரு முறை ஆலோசித்தப் பின்பு லக்ஷ்மி விலாஸ் வங்கியில் வைப்பு நிதியை துவங்க வேண்டும்.
சவுத் இந்தியன் வங்கி
400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு சுமார் 9.5 சதவீதம் வட்டியுடனும், 2 வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 9.25 சதவீத வட்டியை அளிக்கிறது சவுத் இந்தியன் வங்கி.
டெவலப்மெண்ட் கிரேடிட் வங்கி
டிசிபி என அழைக்கப்படும் டெவலப்மெண்ட் கிரேடிட் வங்கியில் 18 முதல் 24 மாதம் முதர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 9.50 சதவீத வட்டியும், 13 முதல் 18 மாதம் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 9.40 சதவீதம் வட்டியை அளிக்கிறது
கர்நாடகா வங்கி
1 முதல் 2 வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 9.5 வட்டியை அளிக்கிறது கர்நாடகா வங்கி. மேலும் 2 முதல் ஆண்டு வைப்பு நிதிகளுக்கு 9.25 சதவீத வட்டியை அளிக்கிறது.
டாச்சிஸ் வங்கி
ஜெர்மன் நாட்டை சேர்ந்த வங்கியான டாச்சிஸ் வங்கி என்.ஆர்.ஐ-களுக்கு சுமார் 9.5 சதவீதம் வரை வட்டியை அளிக்கிறது. மேலும் 2 முதல் 3 ஆண்டு வைப்பு நிதிகளுக்கு சுமார் 8.25 சதவீத வட்டியை அளிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications