துருக்கி: ஊழல் இல்லாத அரசியல் அமைய இந்திய மட்டும் இல்லை உலக நாடுகள் அனைத்தும் ஆசைப்படுகிறது (இது தப்பாச்சே!!). துருக்கியில் ஊழலை ஒழிக்கும் வகையில் அந்நாட்டு மக்கள் ஊழல் தொடர்பான செய்திகளை சமுக வலைதளமான ட்விட்டர் வலைதளத்தில் பரப்பி வந்தனர். இதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் ட்விட்டர் வலைதளத்திற்கு துருக்கி நாட்டில் தடை விதித்துள்ளார். இதனால் ட்விட்டர் முற்றிலும் முடங்கியது.
வரும் மார்ச் 30ஆம் தேதி அந்நாட்டில் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் துருக்கியில் ஊழல் பெறுகியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. எனவே துருக்கி மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ட்விட்டர் வலைதளம் மூலம் மக்களுக்கு "முக்கிய திருடன்" என்ற பெயரில் பிரதமரையும், "திருடனின் மகன்கள்" என்ற பெயரில் பிரதமர் குடும்ப நபர்களை தாக்கி செய்திகள் பரப்பி வருகின்றனர்.
தடை
இதனால் துருக்கி அரசு, நாட்டில் தனது வலிமையை இழந்து வரும் நிலையில் கோர்ட்டின் அனுமதியுடன் ட்விட்டர் வலைதளத்திற்கு துருக்கி நாட்டு பிரதமர் எர்டோகன் தடை விதித்துள்ளார்.
பிரதமரின் அர்த்தமற்ற பதில்
'இந்த தடை குறித்து உலக நாடுகள் என்ன கூறுகின்றன? என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதன் மூலம் துருக்கி குடியரசின் வல்லமையை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள்' என்று எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
டார் நெட்வொர்க்
இணையதளத்தில் உளவும் மிகவும் சக்திவாய்ந்த அடையாளம் தெரியாத தளம் தான் இந்த டார் நெட்வொர்க். இந்த இணையதளம் துருக்கி அரசு எதிராக துருக்கி மற்றும் உலக நாடுகளில் தகவல் பரப்பி வருகிறது. இந்த இணையதளம் அமெரிக்கவிலிருந்து செயல்படுவதாக தகவல் தெரிகிறது, ஆனால் அதற்கு எந்த விதமான சட்சியும் இல்லை.
கடந்த ஒரு வாரக் காலத்தில் சுமார் 1000 புதிய துருக்கி வாடிக்கையாளர்களை தன் நெட்வொர்கில் சேர்த்துள்ளது. ட்விட்டர் வளைதளத்திற்கு பிறகு துருக்கி அரசுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் தளம் இது தான்.
எஸ்.எம்.எஸ்
துருக்கி வோடஃபோனின் எஸ்.எம்.எஸ். சேவை மூலமும் ஊழல் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் எப்போதும் போல் அவர்கள் இப்போதும் பதிவேற்றம் செய்து கொண்டுதான் உள்ளனர்.
ட்விட்டர் தடை செய்யப்பட்ட நாடுகள்
ஈரான், லிபியா, வெனிசுலா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ட்விட்டர் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் சீனாவில் ட்விட்டர் சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ட்விட்டர்
இந்த தடையினால் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் அடைந்துள்ளது. மேலும் இது குறித்து ட்விட்டர் நிறுவனம் துருக்கி அரசிடம் கேட்டபோது இந்த தடை தற்காலிகமானது என பதில் குறியது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications