வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம்களில் பண பரிமாற்றம் செய்யலாம்!! பாங்க் ஆஃப் இந்தியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பொதுவாக வங்கி கணக்கு இல்லாமல், வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முடியாது. இதனால் பலதரப்பட்ட மக்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியா நிலை ஏற்பட்டது. இப்பிரச்சனையை களையும் வகையில், இந்த செயல்முறையை செயல்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

 

இதன் அடிப்படையில் பாங்க் ஆஃப் இந்தியா இந்தியாவில் இத்திட்டத்தை செய்லபடுத்தியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய முதல் பொது துறை வங்கி என்ற சிறப்பை இவ்வங்கி பெற்றுள்ளது.

புதிய பரிமாற்றச் சேவை

புதிய பரிமாற்றச் சேவை

நகரம் சார்ந்த வங்கிகள் "இன்ஸ்டன்டு மனி டிரான்ஸ்பர்" என்னும் புதிய அட்டை இல்லாத பண பரிமாற்றச் சேவை துவங்கியுள்ளது. இச்சேவையின் மூலம் பண அட்டை இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

திட்ட இயக்கம்

திட்ட இயக்கம்

இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர், ஒரு நபருக்கு பண செலுத்தவேண்டும் என்றால் அவர் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தின் உதவியை கொண்டு மொபைல் எண் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இந்த நபர் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஏடிஎம்-இல் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

பரிமாற்ற தகவல்

பரிமாற்ற தகவல்

இந்த பணம் பெறும் நபருக்கு பரிமாற்றத்திற்கான தகவல் சிலவற்றை அனுப்பப்படும்.

சேவை கட்டணம்
 

சேவை கட்டணம்

இதற்கான சேவை கட்டணமாக சுமார் 25 ரூபாய் பெற்றுக்கொள்ளப்படும் என வங்கி தெரிவித்தது.

2,100 ஏடிஎம்

2,100 ஏடிஎம்

இவ்வங்கித் தலைவர் வி.ஆர். ஐயர் கூறுகையில் இச்சேவை நடப்பு நிதியாண்டிற்குள் 2,100 கிளை ஏட்எம்களில் நிறுவப்படும் எனவும், தற்போது இவ்வங்கு சுமார் 4,000 ஏடிஎம் இயந்திரத்தை கொண்டு செயல்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Withdraw money from Bank of India ATMs without an account

Bank of India on Tuesday became the first state-run lender to allow withdrawal of funds to individuals from its ATMs without an account in the bank.
Story first published: Tuesday, March 25, 2014, 16:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X