புதிய உலகிற்கு நம்மை அழைத்து செல்லும் பேஸ்புக்!! அகுலஸ் விஆர்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிஃபோர்னியா: உலகில் அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் திறக்கும் ஒரே புத்தகம் முகப்புத்தகம், என்ன புரியலையா? அதுதாங்க பேஸ்புக். இன்றைய மாணவர்கள் மட்டும் அல்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் ஒரே இணையதளம் பேஸ்புக். பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் இளைஞர்களின் அதிக்கம் தான் அதிகம். (பேஸ்புக்ல மட்டும் தாங்க இப்படி, மத்த எல்லா இடத்திலும் வயதானவர்கள் தான் குறிப்பாக அரசியல்..)

 

பேஸ்புக் நிறுவனம் சமுக வலைதளம் சேவையை தவிற பிற துறைகளிலும் கால்தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக பேஸ்புக் நிறுவனம் பல நிறுவனங்களை கையகபடுத்தி வருகிறது. நேற்று காலை இந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கின் வலைதள பதிவின் படி விர்சுவல் ரியாலிட்டி துறையில் கலக்கும் அகுலஸ் விஆர் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைபற்றியதாக அவர் தெரிவித்தார்.

2 பில்லியன் டாலர்

2 பில்லியன் டாலர்

கலிஃபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அகுலஸ் விஆர் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலருக்கு கைபற்றியுள்ளது.

விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்

விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்

அகுலஸ் விஆர் நிறுவனம் விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் எனப்படும் நில உலகத்தில் மெய்நிகர் உலகத்தை காட்டும் இயந்திரத்தை (அதவாது சுருக்கமாக சொன்னால் "இருக்கு ஆனா இல்ல, ஆனா இருக்குரதே வேறமாறி இருக்கு" இதுதாங்க விர்சுவல் ரியாலிட்டி) தயாரித்து வருகிறது.

கேமிங் துறையில் விர்சுவல் ரியாலிட்டி

கேமிங் துறையில் விர்சுவல் ரியாலிட்டி

அகுலஸ் நிறுவனத்தின் இச்சேவையை பேஸ்புக்கின் கேம்களில் உபயோகபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக பேஸ்புக்கின் ஃபாம்வைல் கேம்மில் பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதர துறைகள்
 

இதர துறைகள்

மேலும் பேஸ்புக் நிறுவனம் விளையாட்டு மட்டும் இல்லாமல் இச்சேவையை தொலைதொடர்பு, மீடியா, கல்லி, பொழுதுபோக்கு மற்றும் சில துறைகளில் பயன்படுத்த மார்க் முடிவு செய்துள்ளார்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

முன்று மாதம் முன்பு தான் இந்நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 மில்லியன் டாலருக்கு கைபற்றியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook just bought virtual reality company Oculus VR for $2 billion

Facebook has purchased virtual reality company Oculus VR for a total of $2 billion. Oculus will retain its Irvine, Ca., headquarters and continue to make its marquee virtual reality headset, the Oculus Rift.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X