வங்கி கணக்கை டுவிட்டர் மூலம் இயக்கும் ஜிஃபி சேவை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சமுகவலைதளங்கள் அதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் மிகவும் திறம்பட யோசித்து கோட்டக் மஹிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டுவிட்டர் மூலம் வங்கி சேவையை பயன்படுத்த ஒரு புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையின் பெயர் ஜிஃபி.

 

சமிபத்திய ஒரு ஆய்வு அறிக்கையின் மொபைல் பாங்கிக் பயன்படுத்தும் மக்களில் சுமார் 99 சதவீத மக்கள் சமுகவலைதளத்தை பயன்படுத்துகின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இத்தகவலை பயன்படுத்தி கோட்டக் மஹிந்திரா வங்கி சுமார் 11 நகர வாடிக்கையாளருக்கு சமுகவலைதளம் மூலம் வங்கி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

வங்கிச் சேவைகள்

வங்கிச் சேவைகள்

இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பேலன்ஸை தெரிந்து கொள்ளுதல், செக் புக் பெற விண்ணப்பித்தல், கடைசி பரிமாற்றங்களை தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட 21 வங்கிச் சேவைகளை டுவிட்டர் கணக்குகளைக் கொண்டே தெரிந்து கொள்ள முடியும்.

வெகுமதி புள்ளிகள்

வெகுமதி புள்ளிகள்

இந்த புதிய சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வெகுமதி புள்ளிகளும் வழங்க கோட்டக் மஹிந்திரா வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த புள்ளிகளின் மூலம் சில பல தள்ளுபடி ஆஃப்ர்கள் வழங்க இவ்வங்கி தெரிவித்துள்ளது.

உங்கள் சிந்தனைக்கு

உங்கள் சிந்தனைக்கு

பொதுவாக சமுகவலைதளங்களில் அடையாள திருட்டு ஏற்படுவது இயல்பு, சிலருக்கு இந்த அடையாள திருட்டு மிகப்பெரிய பிரச்சனையாகவும் திரும்பும், முக்கியமாக பெண்களுக்கு. தற்போது இச்சேவையின் மூலம் வங்கி கணக்கின் தகவல்களையும் களவாட நாமே வழி வகுத்துகொடுக்கிறோம். சிந்திக்க வேண்டும் மக்களே!!...

பேஸ்புக், ஜி-மெயில்
 

பேஸ்புக், ஜி-மெயில்

இந்த டுவிட்டர் வங்கிக் கணக்கை நாமாகவே பேஸ்புக் அல்லது ஜிமெயில் மூலம் திறந்து கொள்ள முடியும்.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

ஆதார் அட்டை தகவல்களின் மூலம் ஆன்லைனில் வங்கிக் கணக்கை திறக்கும் ஈ- கே.ஒய்.சி முறையையும் அறிமுகப்படுத்த உள்ளது.

ஆன்லைன் சேவை

ஆன்லைன் சேவை

கடந்த சில மாதங்களாக கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் சேமிப்பு கணக்கு வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kotak Mahindra launches social bank account Jifi

Kotak Mahindra Bank has launched Jifi, a fully-integrated social bank account with youth as the target segment. Jifi transcends digital banking by seamlessly incorporating social networking platforms such as Twitter and Facebook with mainstream banking, the bank said.
Story first published: Thursday, March 27, 2014, 17:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X