வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்தீர்களா?? இதை மிஸ் பண்ணிடாதீங்க..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நடப்பு நிதியாண்டிற்கான வரிவிதிப்பிற்குட்பட்ட தங்களின் நிகர வருமானத்தை விளக்கி, வரி செலுத்துவோர் தாக்கல் செய்யக்கூடிய வருமான வரி ரிட்டர்னை, உரிய வரித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தாலும், அதனை சரி பார்த்துக்கொள்வது அவசியம்.

 

ஏனெனில், வருமான வரி ரிட்டர்னின் அக்நாலெட்ஜ்மென்ட் அல்லது ஐடிஆர்-வியானது பெங்களூரில் உள்ள சென்ட்ரல் பிராசஸிங் சென்டர் (சிபிசி) மையத்துக்கு சென்றடைவதே வருமான வரி ரிட்டர்ன் தாக்கலின் இறுதிகட்ட நடைமுறையாகும்.

அவ்வாறு இல்லையென்றால், வருமான வரித்துறை, வரி செலுத்தும் நபர் அவருக்கான ரிட்டர்னை தாக்கல் செய்யவில்லையென்று கருதி, டாக்ஸ் டிடக்டட் அட் சோர்ஸை (டிடிஎஸ்) குறைவாக செலுத்தியுள்ளார்கள் என்றோ அல்லது சில சமயங்களில் செலுத்தவேயில்லை என்றோ கூறி அவருக்கு டாக்ஸ் டிமாண்ட் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைக்கும்.

ஐடிஆர்-வி

ஐடிஆர்-வி

இதுபோன்ற டிமாண்ட் நோட்டீஸ் மற்றும் அபராதங்களை தவிர்க்க ஐடிஆர்வி எனப்படும் அக்நாலெட்ஜ்மென்ட் உரிய அதிகாரிகளிடம் சென்றடைந்ததா என்பதை இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதனை உறுதி செய்து கொள்வது நலம்.

ஏமாற்று வேலை வேண்டாம்

ஏமாற்று வேலை வேண்டாம்

மேலும், வேண்டுமென்றே தங்களின் வருவாய்க்கான மூலாதாரங்கள், மூதலீடுகள் மற்றும் செலவீடுகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ரிட்டர்னை தாக்கல் செய்யாமல் இருக்கும் நபர்களைப் பற்றிய நிதி சார்ந்த நுணுக்கமான தகவல்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அவர்களின் பான் கார்டு தகவல்களைப் பொருத்திப் பார்த்து அறிந்து கொண்டு விடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதிகபட்ச வரி
 

அதிகபட்ச வரி

பான் கார்டு நடைமுறை அமலுக்கு வந்துள்ளதையடுத்து, இது போன்று ஏதேனும் உள்நோக்கத்துடனோ அல்லது பிற்பாடு செலுத்திக் கொள்ளலாம் என்று அலட்சியமாகவோ வரியை செலுத்தாத நபர்கள் பலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதன் விளைவாக அட்வான்ஸ் வரி மற்றும் செல்ஃப்-அசெஸ்மென்ட் வரி போன்றவை வரிகள் விதிக்கப்பட்டு அத்துறையின் வரி வருவாய் பெருகியுள்ளது.

வருவாய் ஈட்ட ஒரு ஐடியா

வருவாய் ஈட்ட ஒரு ஐடியா

மேலும் ஒரு நற்பலனாக, நடப்பு நிதியாண்டிற்கான பான் கார்டு தகவல்களை பொருத்தி, அதன் மூலம் இனி வரும் காலத்தில் வரி செலுத்தத் தவறுவோரின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதோடு, வரி விதிப்புக்குள்ளானோரிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவு வருவாயை ஈட்டவும் இத்துறை திட்டமிட்டுள்ளது.

டிமாண்ட் நோட்டீஸ்

டிமாண்ட் நோட்டீஸ்

வருமான வரித்துறையிலிருந்து டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் சூழல் உருவாகிவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் வரி விதிப்பு விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றுவதற்கு வரி ஆலோசகர்கள் அல்லது சார்ட்டட் அக்கவுன்டன்ட்களை கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Verify status of income tax return after filing

Income tax return filed by taxpayers highlighting their net taxable income for a given financial year, needs to be verified even after filing with the tax authorities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X