மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளை நிறுவனமான இன்போசிஸ் பப்ளிக் சர்விசஸ் நிறுவனம் பிரைம் தெராபியூட்டிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு புதிய மென்பொருள் சோதனை மையத்தை அமைக்க உள்ளது. பிரைம் தெராபியூட்டிக்ஸ், மென்பொருள் சோதனைக்காக இன்போசிஸ் பப்ளிக் சர்விசஸ் நிறுவனத்துடன் 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரைம் தெராபியூட்டிக்ஸ் நிறுவனம் தனது சுகாதார மற்றும் மருந்தியல் துறையை மேம்படுத்துவதற்காக இன்போசிஸ் பப்ளிக் சர்விசஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததாக இந்நிறவனம் தெரிவித்தது.

இந்நிறுவனம் அமெரிக்காவின் மினிசோட்டா பகுதியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது
மேலும் பிரைம் தெராபியூட்டிக்ஸ் நிறுவனம் கூறுகையில் "இன்போசிஸ் பப்ளிக் சர்விசஸ் நிறுவனத்தின் மென்பொருள் சேவையின் மூலம் எங்கள் வாடிக்கையாளருக்கு சிறந்த சேவை அளிக்க முடியும் என நம்புகிறோம்" என தெரிவித்தனர்.
இன்போசிஸ் நிறுவனம், பிரைம் தெரப்யூடிக்ஸ் நிறுவனத்தின் சோதனைச் சேவையும், தர நிர்ணய துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இன்போசிஸ் நிறுவனம் இந்நிறுவனத்திற்கு பல மென்பொருள் சேவைகள் வழங்கி வந்தது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications