அசரவைக்கும் டாப் 10 விமான நிலையங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு காலத்தில் ஆடம்பரமான கனவாகக் கருதப்பட்டு வந்த விமான பயணம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றியமையாததாகி விட்ட இன்றைய காலகட்டத்தில், சர்வ சாதாரணமாகிப் போனது. விமான நிலையங்கள் என்பவை விமானங்கள் புறப்பட்டுச் செல்வதற்கும், விமானங்களுக்காக காத்திருப்பதற்கும் மட்டுமே உபயோகிக்கப்படும் ஒரு இடமாக இருந்த நிலை தற்போது மாறிவிட்டது.

 

விமான நிலையங்கள் பலவும் வெறும் கட்டடங்களாக அல்லாது கட்டுமான அற்புதங்களாகக் காட்சியளித்து, பெரிய பெரிய ஏர்லைன்களின் பிரம்மாணடமான கூடாகத் திகழ்கின்றன. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க விமான நிலையங்களின் அளவுகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப் பரபரப்பான மற்றும் பெரிய விமான நிலையங்கள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்!

ஹார்ட்ஸ்ஃபீல்டு சர்வதேச விமான நிலையம், யுஎஸ்ஏ

ஹார்ட்ஸ்ஃபீல்டு சர்வதேச விமான நிலையம், யுஎஸ்ஏ

சுமார் 90 மில்லியன் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு சேவைகள் வழங்கி வரும் இவ்விமான நிலையம், உலகின் பரபரப்பான மற்றும் பெரிதான விமான நிலையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அமெரிக்காவின் மத்திய மாகாணமான அட்லாண்டாவிற்கு தெற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்நிலையம்.

பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையம், சீனா

பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையம், சீனா

பெய்ஜிங் சிட்டி சென்டருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இவ்விமான நிலையம், வருடத்துக்கு சுமார் 73 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை வழங்கி, ஆசியாவிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாகத் திகழ்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து இங்கும், இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் சுமார் 70 விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. இந்நிலையத்தில் மூன்று டெர்மினல்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் ஒன்று உள்நாட்டு விமானங்களையும், இரண்டு டெர்மினல்கள் அனைத்து சர்வதேச விமானங்களையும் கையாள்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது இங்கு வந்து குவியக்கூடிய மக்கள் கூட்டத்தை உத்தேசித்து மூன்றாவது டெர்மினல் அமைக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையம், யுனைட்டட் கிங்டம்
 

லண்டன் ஹீத்ரூ விமான நிலையம், யுனைட்டட் கிங்டம்

சுமார் 80 நாடுகளில் உள்ள 184 இடங்களுக்கு சுமார் 84 விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை வழங்கி வரும் ஹீத்ரூ விமான நிலையம் பிரத்யேக உற்சாகத்துடன் காணப்படுகிறது. இதன் ஒவ்வொரு டெர்மினலிலும், பலதரப்பட்ட மதத்தவரும் பிரார்த்திக்கக்கூடிய பிரார்த்தனைக்கூடம் ஒன்றும், ஆலோசனைக்கூடம் ஒன்றும் காணப்படுகின்றன. இங்குள்ள ஐந்து டெர்மினல்களுள் டெர்மினல் 5-க்கு, ஐரோப்பாவின் மிகச்சிறந்த டெர்மினல் என்று பயணிகள் தரச்சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம், யுஎஸ்ஏ

ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம், யுஎஸ்ஏ

உலகின் மிகப் பிரபலமான விமான நிலையங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையம், விமானப் பயணிகளுக்கு மிகச்சிறந்த சேவை மற்றும் வசதிகளை வழங்கி வருவதோடு, அமெரிக்காவின் மிகப்பெரும் விமான நிறுவனங்களின் முக்கிய ஸ்ட்ராட்டெஜிக் பார்ட்னராகவும் திகழ்கிறது.

தி டோக்கியோ சர்வதேச விமான நிலையம், ஜப்பான்

தி டோக்கியோ சர்வதேச விமான நிலையம், ஜப்பான்

இவ்விமான நிலையம் ஹனேடா விமான நிலையம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. ஜப்பானின் இரண்டு பிரதான விமான நிறுவனங்களின் முக்கிய அடித்தளமாக விளங்குகிறது இவ்விமான நிலையம். 1978 ஆம் ஆண்டு வரை, ஹனேடா விமான நிலையம் சர்வதேச விமானங்களையும் கையாண்டு வந்திருக்கிறது, ஆனால் அதற்குப் பின் இது அனைத்து உள்நாட்டு விமானங்களையும் கையாள்கிறது. பயணிகள் இந்நிலையத்துக்கு கம்ஃபோர்ட் ஸிட்டி விமான நிலையம் என்ற செல்லப் பெயரை சூட்டியுள்ளனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் சர்வதேச விமான நிலையம், யுஎஸ்ஏ

லாஸ் ஏஞ்சலீஸ் சர்வதேச விமான நிலையம், யுஎஸ்ஏ

இவ்விமான நிலையம் மிகப்பெரும் ஆரிஜின் அண்ட் டெஸ்டினேஷன் ஏர்போர்ட் என்று அறியப்படுகிறது. அதாவது இணைப்பு விமானங்களைப் பிடிப்பதற்காக இங்கு வந்து இறங்கும் பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் தங்கள் பயணத்தைத் தொடக்கும் பயணிகள் மற்றும் பயணத்தை முடிக்கும் பயணிகள் ஆகியோரின் எண்ணிக்கையே அதிகமாகும். தற்போது புதிதாக மறுசீரமைக்கப்பட்டுள்ள டாம் பிராட்லி சர்வதேச டெர்மினல் உள்ளிட்ட ஒன்பது பயணிகள் டெர்மினல்களுடன் சேவை வழங்கி வருகிறது இவ்விமான நிலையம்.

சார்லஸ் டி கால்லே விமான நிலையம், ஃபிரான்ஸ்

சார்லஸ் டி கால்லே விமான நிலையம், ஃபிரான்ஸ்

ஐரோப்பாவின் பரபரப்பான, பெரிய பயணிகள் விமான நிலையங்களில் இந்நிலையமும் ஒன்று. இது ரோய்ஸி விமான நிலையம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. உலகின் பிரதான விமான மையங்களுள் ஒன்றாக விளங்கும் இந்நிலையத்திற்கு, இரண்டாம் உலகப்போரின் போது பிரெஞ்சு குடியரசின் அதிபராக இருந்த சார்லஸ் டி கால்லே அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டல்லாஸ் விமான நிலையம், யுஎஸ்ஏ

டல்லாஸ் விமான நிலையம், யுஎஸ்ஏ

யு.எஸ் -இன் நான்காவது பரபரப்பான விமான நிலையமான இது, ஏ, பி, ஸி, டி மற்றும் இ ஆகிய ஐந்து டெர்மினல்களைக் கொண்டிருக்கிறது. இந்த டெர்மினல்களுள் ஏ, பி, ஸி, டி ஆகியவை அனைத்து சர்வதேச பயணிகளுக்கும், ஏ மற்றும் ஸி ஆகியவை பிரத்யேகமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கும் சேவை வழங்கி வருகின்றன.

சேயேக்கர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம், இந்தோனேஷியா

சேயேக்கர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம், இந்தோனேஷியா

ஜகார்டா சர்வதேச விமான நிலையம், இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள ஜகார்தாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விமான சேவை வழங்கி வரும் பிரதான விமான நிலையமாகத் திகழ்கிறது. இவ்விமான நிலையத்திற்கு, இந்தோனேஷியாவின் முதல் அதிபர் மற்றும் துணை-அதிபராக விளங்கிய மொஹமத் ஹட்டா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையம், யுஏஇ

துபாய் சர்வதேச விமான நிலையம், யுஏஇ

துபாய் சர்வதேச விமான நிலையம், 2008 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டதும், விருது வென்றதுமான எமிரேட்ஸ் டெர்மினல் 3 உள்ளிட்ட மூன்று டெர்மினல்களைக் கொண்டுள்ளது. சுமார் 1.5 மில்லியன் சதுர அடி பரப்பளவுடன் உலகின் மிகப்பெரிய கட்டிடமாகத் திகழும் டெர்மினல் 3, முக்கியமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கெனவே பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's 10 Largest Airports

In the world where technological advancement has become a necessity, flying has become a common medium for travel which once was a luxurious dream. The airports are now not just a waiting lounge and a place from where the big birds take off. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X