டெல்லி: சிஐஐ என்று அழைக்கப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் புதிய தலைலராக டிசிஎம்ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற 2014-2015 நிதியாண்டிற்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்திய தொழிலக கூட்டமைப்பு என்பது இந்திய தொழில்துறையை நாட்டின் வளர்ச்சி பாதையை நோக்கி செயல்படுத்தும் ஒர் அமைப்பு, இந்த அமைப்பின் செயல்பாடுகள் நாட்டில் வளமையான தொழில்துறை வளர்ச்சி அடைய முக்கிய பங்கு வகுக்கிறது.

அஜய் ஸ்ரீராம் மும்பையில் உள்ள சைடன்ஹாம் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றவர். மேலும் பல கல்லுரிகளில் நிர்வாக பயிர்சி பெற்றவர், குறிப்பாக ஹாவர்டு பல்கலைகளகத்தில் ஒர் சிறப்பு வகுப்பில் பயிற்சி பெற்றவர். மேலும் இவர் ஸ்ரீராம் காமர்ஸ் கல்லூரியில் நிர்வாக தலைவராகவும் இருக்கிறார்.
விவசாயம், வினைல் உள்ளிட்ட பல வியாபாரங்களில் சுமார் 5700 கோடி வருமானத்துடன் சிறப்பாக செயல்படுகிறது டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனம்.
சி.ஐ.ஐ.-யின் தற்போதைய தலைவராக இன்போஸிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கிருஷ் கோபாலகிருஷ்ணன் குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications