பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ சம்பளம் குறைக்கப்பட்டது!!

சான் பிரான்சிஸ்கோ: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் குறைந்த வயதில் இடம்பிடித்தவர்கள் மிகவும் குறைவும், அதிலும் தனது சொந்த பணத்தை (பரம்பரை சொத்துக்கள் இல்லாமல்) கொண்டு இத்தகைய நிலையை அடைந்த பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா??

கடந்த வருடம் முழுவதும் இவரின் சம்பளம் என்று பார்த்தால் சுமார் 769,000 டாலர் ஆகும். ஆனால் 2014ஆம் நிதியாண்டின் துவக்கம் முதலே இவரின் சம்பளம் வெறும் 1 டாலராக குறைத்துக் கொண்டார். இந்த சம்பளம் இந்நிறுவனத்தின் பணிபுரியும் கடைசி நிலை பணியாளரின் சம்பளத்தை விட குறைவாகும். இந்த 1 ரூபாய் அல்லது 1 டாலர் சம்பளம் என்ற டெக்னிக்கை யார் துவங்கியது என்று தெரியுமா??

27 பில்லியன் டாலர்

27 பில்லியன் டாலர்

பேஸ்புக் நிறுவனத்தின் சுமார் 27 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை தன்னகத்தில் வைத்துள்ளார் என அமெரிக்க பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி

மேலும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செர்லின் சன்டுபெர்க் வருடத்திற்கு 16.1 பில்லியன் டாலர் சம்பளமாக பெறுகிறார்,

தலைமை நிதியியல் அதிகாரி

தலைமை நிதியியல் அதிகாரி

அதேபோல் தலைமை நிதியியல் அதிகாரி டேவிட் எம்பர்மேன் வருடத்திற்கு 10.5 மில்லியன் டாலர் அளவு சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் அவர்களை போலவே இவரும் தனது சம்பளத்தை 1 டாலராக குறைத்துக்கொண்டார்.

1ரூபாய் சம்பளம் பெற்ற முதல்வன்

1ரூபாய் சம்பளம் பெற்ற முதல்வன்

ஆனால் உண்மையில் 1 டாலர் சம்பளத்தை அறிமுகம் செய்து வைத்தவர் முகமது அலி ஜின்னா அவர்கள் தான். இவர் பாக்கிஸ்தான் நாடின் முதல் கவர்னர் ஜெனரல். இவர் தனது பதவியில் இருக்கும் போது எந்த வித சலுகைகளும் பெறாமல் வெறும் 1 ரூபாய் சம்பளத்தை பெற்றார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+