சென்னை: 2014-15 புதிய நிதியாண்டு துவங்கிய வேலையில் பங்குசந்தையில் உயர்வை எதிர்பார்த்த நிதியியல் வல்லுனர்களுக்கு பங்கு சந்தை ஏமாற்றத்தை அளித்தது. இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே பங்குசந்தை சரிய துவங்கியது.
இன்று காலை 9.15 மணியளவில் 22464.19 என்றளவில் துவங்கிய மும்பை பங்கு சந்தை, 11.13 மணிக்கு சுமார் 90 புள்ளிகள் குறைந்து 22373.28 அடைந்தது குறிப்பிடதக்கது.
லாபம் கண்ட துறைகள்
தற்போதிய நிலவரப்படி பொது துறை நிறுவனங்கள், ஐடி துறை நிறுவனங்கள் மற்றும் மருத்துவ துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சரிவை கண்ட நிறுவனங்கள்
நுகர்வோர் நிறுவனங்கள், வங்கியில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சரிவை கண்டது.
விடுமுறை
இன்று வங்கி கணக்கின் முடிவு நாள் என்பதால் அன்னிய செலாவணி மற்றும் பணச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களின் செயல்பாடு பாதித்துள்ளது.
இந்திய ரூபாய் உயர்வு
இன்று அன்னிய செலவாணி சந்தை விடுமுறை நாளாய் இருப்பினும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு சுமார் 30 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 59.91 என்றளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஒரு வருடத்தின் குறைவன மதிப்பாகும்.


Click it and Unblock the Notifications