சாலை போக்குவரத்து நிரம்பி வழியும் 10 நகரங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தொழிற்துறை மற்றும் பொருளாதாரத்தின் அதீத வளரச்சியால் உலகின் அனைத்து பகுதிகளிலும் பல பரிமானங்களில் வளர்ந்து வருகிறது. வளர்ந்து வரும் இந்த வேகமான உலகத்தில் வாகனங்கள் இல்லாமல் நாம் எதையும் செய்ய முடிவதில்லை. ஆனால் சாலைகளில் வேகமாகச் செல்ல வேண்டிய வாகனங்கள், தவழ்ந்து செல்லும் போதும், நாம் எதிர்பார்க்கும் வேகத்திற்கு மாறாக உருளும் போதும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைப் பார்த்து சாபம் விடாதவர்கள் மற்றும் கோபப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

 

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாட்களிலும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்வது என்பது தவிர்க்க முடியாத விஷயமாகவே உள்ளது. அடுத்த முறை இதே போல போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளைகளில், இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் 10 நகரங்களைப் பற்றி நினைத்து திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள். உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல்களை கொண்டிருக்கும் நகரங்களாக இந்த 10 நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

அமெரிக்கவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முன்னணி நிதி மற்றும் கலாச்சார நகரமான சான் பிரான்சிஸ்கோ உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல்களை கொண்டிருக்கும் நகரங்களில் 10-வது இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு தொழில் செய்பவர்களில் 14.6 சதவீதம் பேர் பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மான்செஸ்டர், இங்கிலாந்து

மான்செஸ்டர், இங்கிலாந்து

பிரிட்டனின் மிகவும் வேகமாக வளரும் நகரமாக இருக்கும் மான்செஸ்டர் உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல்களைக் கொண்டிருக்கும் நகரங்களில் 9-வது இடத்தில் உள்ளது. போக்குவரத்து என்று வரும் போது ஐரோப்பாவில் மிகவும் ஊர்ந்து செல்லும் நகரங்களில் ஒன்றாக மான்செஸ்டர் உள்ளது. உலகின் முதல் தொழில் நகரமாக அறியப்பட்டிருக்கும் இந்த நகரம், உலகின் மிகுந்த நெரிசல் மிக்க நகரமாகவும் உள்ளது. இந்த நகரத்தின் ஓட்டுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 46 மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ரோட்டர்டேம், நெதர்லாந்து
 

ரோட்டர்டேம், நெதர்லாந்து

ஐரோப்பாவின் சுறுசுறுப்பான மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்றாக இருக்கும் ரோட்டர்டேம் நகரம் அதன் எராஸ்மஸ் பல்கலைக்கழத்திற்காக மிகவும் அறியப்படும். இந்த நகரத்தின் உயிரோட்டமுள்ள கலாச்சார வாழ்க்கை, நுணுக்கமான கட்டிடக்கலை, கண்களைக் கவரும் ஆற்றங்கரைப் பகுதிகள் மற்றும் கடற்கறைகள் என பல அம்சங்கள் உள்ளன. 'ஐரோப்பாவின் நுழைவாயில்' என்றும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. ஆண்மையில், இந்த நகரத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், இந்ந நகரத்தின் மையப்பகுதியில் வசிப்பவர்களில் 70 சதவீதம் பேர் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இது பிற நகரப் பகுதிகளை விட அதிகமான எண்ணிக்கையாகும்.

ஹோனலூலு, அமெரிக்கா

ஹோனலூலு, அமெரிக்கா

மிக மோசமான போக்குவரத்து நெரிசல்களைக் கொண்ட நகரங்களில் அமெரிக்காவின் ஹோனலூலு 7-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்நகரத்தின் சாலை நெருக்கடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 58 மணி நேரங்கள் ஓட்டுநர்கள் வீணடிப்பதாக சொல்லப்படுகிறது. முதன்மையான நேரங்களில், ஹோனலூலு நகரத்தின் சாலைகள், குறிப்பபாக மேற்கு புறநகர் பகுதிகள் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக் கொண்டு அல்லாடி வருகின்றன.

பாரிஸ், பிரான்ஸ்

பாரிஸ், பிரான்ஸ்

காதலின் தலைநகரமான பாரிஸ் நகரத்திற்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்பது அனைவரின் ஆசை! என்னதான் பசுமையான மற்றும் உயிரோட்டமான நகரமாக கருதப்பட்டாலும் பாரிஸ் நகரம், உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்ற அவப்பெயரையும் பெற்ற நகரமாகவே உள்ளது - அந்நகரம் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

இலண்டன், இங்கிலாந்து

இலண்டன், இங்கிலாந்து

இங்கிலாந்தின் தலைநகரமான இலண்டன் நகரம் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் முதன்மையான நிதி மற்றும் உலகளாவிய நகரங்களில் ஒன்றாக இலண்டன் உள்ளது. அதே போல, உலகிலேயே மிகவும் அதிகமான அளவிற்கு மக்கள் வந்து செல்லும் நகரங்களில் ஒன்றாகவும் இலண்டன் உள்ளதால், இலண்டனில் டிராஃபிக் ஜாம் ஆகாத நாளே இல்லை என்று சொல்லலாம்.

மிலன், இத்தாலி

மிலன், இத்தாலி

இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரமான மிலன் நகரம், உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் 4-வது இடத்திற்கு முண்டியடித்துக் கொண்டு முன்னேறியுள்ளது. 1.35 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்த நகரத்திற்கு, ஆண்டுதோறும் வந்து செல்பவர்கள் மட்டும் 2 மில்லியன் பேர். இந்த நகரத்தின் அதீதமான போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் இதிலிருந்தே விளங்கியிருக்கும்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

அமெரிக்காவில் நியூயார்க்க நகரத்திற்கு அடுத்ததாக அதிக மக்கள் தொகையையும் கொண்டிருக்கும் உலகளாவிய நகரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் உள்ளது. உலகளாவிய நகரங்களுக்கான குறியீட்டில் 6-வது இடத்தையும் மற்றும் உலகளாவிய பொருளாதார சக்திகளுக்கான குறியீட்டில் 9-வது இடத்தையும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெற்றுள்ளது. இந்நகரத்தில் பயணம் செய்பவர்களில் சராசரியாக ஆண்டுக்கு 72 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்களை அனுபவிக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்

ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் 2-வது இடத்தைப் பிடிக்கிறது ஆண்ட்வெர்ப் நகரம். இந்நகரத்தின் மக்கள் தொகை 512,000. முதன்மையான நேரங்களில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் இந்த நகரத்தில், சுமார் 40 சதவீதம் அளவிற்கு பயண நேரம் அதிகமாகும்.

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸ்ஸல்ஸ் நகரம் உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மிகவும் பெரிய நகர குடியிருப்புகளைக் கொண்டிருக்கும் பிரஸ்ஸல்ஸ் நகரம் உலகின் மிக மோசமான போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நகரத்திலுள்ள கார்களின் எண்ணிக்கைள நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முதன்மையான நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாமல் இந்நாட்டின் அரசு தல்லாடி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's 10 Most Traffic Congested Cities

Vehicles when crawls on road at a much slower speed that one can expect; everyone tends to curse the traffic or the vehicles that lead the line, simply to vent anger.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X