மும்பை: ரிசர்வ் வங்கி நேற்று காலையில் ரிசர்வ் புதிய பணவியல் கொள்கையை வெளியிட்டது இது வங்கிகளுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் வங்கி பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது என்றே சொல்லாம்.
இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே வங்கி பங்குகள் சிறப்பாக செயல்பட துவங்கியது. இதனால் மும்பை பங்கு சந்தையில் வங்கி அளவிட்டில் 133 புள்ளிகள் உயர்ந்து 12721.90 புள்ளிகளை எட்டியது. நேற்று வர்த்தக முடிவிலும் வங்கி பங்குகள் உயர்வுடனே முடிந்தது.
நீண்ட கால முதலீட்டு
இதனால் நீண்ட கால முதலீட்டு நோக்கில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகளில் முதலீடு செய்தனர். வங்கி வட்டி வகிதங்களில் எந்த விதமான மாற்றும் இல்லாததால் வங்கி பங்குகள் பெருவாரியான அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
தனியார் வங்கிகள்
தனியார் வங்கி துறையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெடிஎஃப்சி வங்கிகள் சரிவை தழுவியது, மற்ற எல்லா வங்கி பங்குகளும் உயர்ந்தது.
பொது துறை வங்கிகள்
பொது துறை வங்கிகளில் எல்லா வங்கிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் பரோடா அகியவை சுமார் 35 புள்ளிகள் உயர்ந்து புத்துணர்வுடன் செயல்படுகிறது.
புதிய வங்கிகள்
புதிய வங்கிகள் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் வங்கிகள் பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
புதிய துணை கவர்னர்
ரிசர்வ் வங்கியின் தனிக் குழு புதிய துணை கவர்னருக்கான ஆறு பேர் கொண்ட பட்டியலை ஆய்வு செய்து வந்தது. இதில் இப்பட்டியல் பாங்க் ஆஃப் பரோடாவின் தலைவர் எஸ்.எஸ் முத்ரா அவர்களை இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை பற்றி அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications