சூப்பர் ரிச் டாக்ஸை கண்டு அலறும் பணக்காரர்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேரடி வரி விதிப்பு சட்டத்தின் கீழ் வரும் சூப்பர் ரிச் டாக்ஸ் குறித்த மசோதாவை நேற்று பொது விவாதத்திற்காக வெளியிட்டார். கடந்த ஒர் ஆண்டாக இந்த மசோதா குறித்து கடுமையான வாக்குவாதத்திற்கு உட்படுத்தபட்டு பின்பு கிடப்பில் போடபட்டு வந்தது.

 

இந்த மசோதா 2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதா இன்று வரை ஒரு முடிவுக்கு வரவில்லை, 2014-15ஆம் நிதியாண்டில் கண்டிப்பாக இதனை அமல்படுத்தியே ஆகவேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக 1 கோடிக்கு அதிகமாக வருமானம் பெரும் ஒவ்வொரு தனிநபரும் 10 சதவீதம் கூட்டு வரி செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு பயனம்

வெளிநாட்டு பயனம்

இந்தியாவின் பெரிய வர்த்தக தலைகள் எல்லாம் வரி செலுத்துவதை குறைக்க பல மாதங்கள் வெளிநாடுகளிலே தங்கிவிடுகின்றனர், இதனால் இந்தியாவிற்கு வருமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் எல்லாம் தங்களின் பங்கு மதிப்பிற்கு மட்டும் 15 சதவீத வரி செலுத்திவிட்டு வருமான வரி செலுத்துவதில்லை.

10% கூட்டு வரி
 

10% கூட்டு வரி

இந்த புதிய சட்ட திருத்தத்தின் படி 1 கோடிக்கு அதிகமான வருமானம் அல்லது பங்குகள் மதிப்புகள் கொண்டு இருந்தால் அதற்கு 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.

35% வருமான வரி

35% வருமான வரி

மேலும் 10 கோடி மற்றும் அதற்கு அதிகமாக வருமான பெறும் தனிநபர் மற்றும் இந்து கூட்டு குடும்பங்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும்.

சொத்துக்கள்

சொத்துக்கள்

அதேபோல் 50கோடிக்கும் அதிகமான மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கு 0.25 சதவீத வரி வதிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Direct Tax Code: 35% tax for super rich, no change in exemption limit

Finance minister P. Chidambaram released for public discussion the Direct Tax Code (DTC), 2013, that proposes extra taxes on the super rich.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X